Logo
Logo

முக்கிய செய்தி:

தேர்தல் களம்

ஒரு வேட்பாளரின் பெயர் வாக்காளர் பட்டியலில் 2 இடத்தில் இருந்தால் வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அதிகாரி நிராகரிக்க முடியுமா?

SAMYUKTHA28-03-2024
ஒரு வேட்பாளரின் பெயர் வாக்காளர் பட்டியலில் 2 இடத்தில் இருந்தால் வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அதிகாரி நிராகரிக்க முடியுமா?

ஒரு வேட்பாளரின் பெயர் வாக்காளர் பட்டியலில் 2 இடத்தில் இருந்தால் வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அதிகாரி நிராகரிக்க முடியுமா? - தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்

ஒரு வேட்பாளரின் பெயர் இரண்டு இடங்களில் இருந்தால் அவரது வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அதிகாரி நிராகரிக்க முடியுமா? என்பதற்கு தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்தார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னை தலைமை செயலகத்தில் இன்று அளித்த பேட்டி: தமிழகத்தில் 21,229 பேரிடம் உரிமம் பெற்ற துப்பாக்கிகள் உள்ளன.

பெரும்பாலானவர்கள் காவல் நிலையங்களில் துப்பாக்கிகளை ஒப்படைத்து விட்டனர். இன்னும் 568 பேர் மட்டும் ஒப்படைக்காமல் உள்ளனர். அவர்களில் சிலர் வெளிநாடுகளில் இருக்கலாம். வேறு ஏதாவது காரணங்களால் ஒப்படைக்க முடியாத நிலையில் இருக்கலாம். தமிழகத்தை பொறுத்தவரை சட்டம் ஒழுங்கு பிரச்னை இல்லை. எனவே ஒப்படைக்கப்படாத துப்பாக்கிகளால் பெரிய பிரச்னை எழ வாய்ப்பில்லை.

சி-விஜில் செயலியில் அனுப்பும் புகார்கள், போதிய வீடியோ ஆதாரங்களுடன் இருப்பதால், புகார் அனுப்பிய 100 நிமிடங்களில் நடவடிக்கை எடுப்பது சாத்தியம்தான். பொதுமக்கள் இந்த செயலியை வரும் நாட்களில் பயன்படுத்தி, தேர்தல் நியாயமாக நடைபெற உறுதுணையாக இருக்க வேண்டும். இதுவரை சி-விஜில் செயலியில் 1,383 புகார்கள் வந்துள்ளன.

ஒரு வேட்பாளரின் பெயர், வாக்காளர் பட்டியலில் இரண்டு இடங்களில் இருந்தால் அவரது வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அதிகாரி நிராகரிக்க முடியுமா? என்று கேட்டால், இதற்கென்று தனி விதிகள் உள்ளன. வேட்புமனுவை நிராகரிப்பதற்கான காரணங்களை தேர்தல் கமிஷன் தனியாக பட்டியலிட்டுள்ளது. அதில் நீங்கள் சொன்ன காரணம் இருந்தால், அதில் முடிவெடுக்கும் அதிகாரம் தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு மட்டுமே உள்ளது. அதில் தேர்தல் கமிஷன் தலையிடாது.

நாளை (29ம் தேதி) புனித வெள்ளி பொது விடுமுறை. எனவே வேட்புமனுக்களை இன்று வாபஸ் பெற முடியாது. நாளை (30ம் தேதி) வரை கால அவகாசம் உள்ளது. அப்போது வேட்புமனுக்களை வாபஸ் பெறலாம். வாபஸ் பெறுவதற்கான நேரம் (மாலை 5 மணி) முடிந்ததும், சின்னம் பெற்றிராத கட்சிகள், சுயேச்சைகளுக்கு சின்னம் ஒதுக்கும் பணி நடைபெறும். தங்க, வைர நகை வியாபாரிகள் என்னை சந்தித்தனர். தேர்தல் நேரத்தில் பறக்கும் படை சோதனைகளால் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள அசவுரியங்களை தெரிவித்தனர். பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழு கைப்பற்றும் நகைகள், வருமான வரித்துறையினரிடம் மேல் விசாரணைக்காக ஒப்படைக்கப்படுகிறது. ஆனாலும் அவை உரிய ஆவணங்களை காட்டினால் உடனே திரும்பக் கிடைப்பதற்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டனர். தேர்தல் கமிஷன் விதிமுறைப்படி, நாங்கள் ஒத்துழைப்பு வழங்குவோம் என்று கூறியிருக்கிறோம்.

100 நாள் வேலை திட்டத்துக்கான ஊதியத்தை ஒன்றிய அரசு உயர்த்தி உத்தரவிட்டுள்ளது, தேர்தல் நடத்தை விதிகளுக்கு மீறியதா? என்று கேட்டால், அதுபற்றி எங்களிடம் எந்த தகவலும் இல்லை. அதுபோன்ற விஷயங்களில் தேர்தல் கமிஷன் அனுமதியை ஒன்றிய அரசு பெற்றிருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்