Logo
Logo

முக்கிய செய்தி:

பொது

”வோட்டர் ஐ.டி இல்லாவிட்டால் வாக்களிக்க முடியுமா?” - சத்திய பிரதா சாகு விளக்கம்

LENIN DEVARAJAN18-04-2024
”வோட்டர் ஐ.டி இல்லாவிட்டால்  வாக்களிக்க முடியுமா?” - சத்திய பிரதா சாகு விளக்கம்

தமிழ்நாடு முழுவதும் 1,58,000 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு தெரிவித்துள்ளார். மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்குப்பதிவுக்கு செல்ல இலவசமாக வாகன வசதி செய்துகொடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மற்றும் புதுவையில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு இன்று தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வருபவர்களுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் மற்றும் மாநிலம் முழுவதும் போடப்பட்டுள்ள பாதுகாப்பு பணிகள் குறித்து சத்திய பிரதா சாகு விரிவாக விளக்கமளித்தார். செய்தியாளர்கள் சந்திப்பின் போது சத்திய பிரதா சாகு பேசியதாவது,

”தமிழ்நாடு முழுவதும் 1,58,000 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் 68,321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 86,858 விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் வாக்களிக்கலாம். தமிழ்நாட்டில் 85 வயதிற்கு மேல் 6.14 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். மார்ச் 27-ம் தேதி வரை விண்ணப்பித்தவர்களுக்கு வாக்காளர்கள் அடையாள அட்டை விநியோகிக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்குப்பதிவிற்கு செல்லவதற்கு ஏதுவாக இலவச வாகன வசதிக்கு ’1950’ என்ற உதவி எண்ணுக்கு கால் செய்யலாம். மாநிலம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். வாக்குப்பதிவின் போது முறைகேடு ஏற்பட்டால் ’சி விஜில்’ செயலி மூலம் புகார் அளிக்கலாம்.

44,000 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவை நேரலையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.வாக்காளர் அடையாள அட்டையை தவிர்த்து , 12 அரசு ஆவணங்கள் மூலமாகவும் வாக்களிக்கலாம். கடந்த மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் மொத்தம் 72.47% வாக்குகள் பதிவாகியது. தமிழ்நாட்டில் மொத்தம் 3.32 லட்சம் பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ளனர். தேர்தல் ஆணைய செயலி மூலம் வாக்குப்பதிவு மயத்தை தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் ஆதார், ஓட்டிநர் உரிமம், வங்கி கணக்கு புத்தகம், மருத்துவ காப்பீடு அட்டை, பான் கார்டு, பாஸ்போர்ட் உள்ளிட்ட 13 அரசு ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம்.”, இவ்வாறு சத்திய பிரதா சாகு பேசினார்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்