Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

மக்களவைத் தேர்தல்: 4ம் கட்ட தேர்தலுக்கு அறிவிப்பாணை வெளியீடு

PRIYA18-04-2024
மக்களவைத் தேர்தல்: 4ம் கட்ட தேர்தலுக்கு அறிவிப்பாணை வெளியீடு

மக்களவைத் தேர்தல் 2024ன் 4ம் கட்டத் தேர்தல் வரும் மே மாதம் 13ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பாணையை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது.

மக்களவைக்கான தேர்தல் ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே 7, மே 13, மே 20, மே 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் 7 கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறுகிறது. இதன் முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியாகிறது.

இந்த தேர்தலின் 4ம் கட்ட தேர்தலுக்கான அறிப்பாணையை இந்திய தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்டது. 9 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 96 தொகுதிகளுக்கு மே 13ம் தேதி வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது.

ஆந்திர பிரதேசம், பிகார், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, தெலங்கானா, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் ஜம்மு காஷ்மீரில் உள்ள 96 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது.

தேர்தல் ஆணையத்தின் அறிப்பாணையின் படி மே 13ம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய ஏப்ரல் 25ம் தேதி கடைசி நாள். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஏப்ரல் 26ம் தேதி நடக்கும். வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் ஏப்ரல் 29 என அறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மே 13ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆந்திர பிரதேசத்தில் உள்ள 25 மற்றும் தெலங்கானாவில் உள்ள 17 மக்களவைத் தொகுதிகளுக்கும் மே 13ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. ஆந்திராவில் சட்டமன்றத் தேர்தலும் மே 13ம் தேதி நடக்கிறது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்