Logo
Logo

முக்கிய செய்தி:

குற்றம்

ரூ.15 கோடி மோசடி - 3 பேர் அதிரடி கைது

SAMYUKTHA18-04-2024
ரூ.15 கோடி மோசடி - 3 பேர் அதிரடி கைது

கோவை டெக்ஸ்டைல்ஸ் நிறுவன அதிபரிடம் ரூ.15 கோடி சொத்துக்களை அபகரித்ததாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். கோவை பீளமேடு பி.எஸ்.ஜி. எஸ்டேட் காலனியை சேர்ந்தவர் சிவராஜ் (40). இவர், டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். தனியார் கல்லூரியின் அறங்காவலராகவும் செயல்பட்டு வருகிறார். கடந்த 2014ம் ஆண்டு, நிலத்தை விற்பனை செய்ததற்கு 5 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று வருமான வரித்துறையில் இருந்து சிவராஜூக்கு நோட்டீஸ் வந்தது. அப்போது, சேலத்தை சேர்ந்த அஸ்வின்குமார் (55) என்பவர் அவருக்கு அறிமுகமானார். அவர் சிவராஜிடம் தனக்கு வருமான வரித்துறை அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறியுள்ளார். அதனை நம்பி அவர் அஸ்வின்குமாரை தனது அலுவலகத்தில் வருமான வரித்துறை வேலைகளை கவனிக்கும் பணிக்கு அமர்த்தினார். அஸ்வின்குமார் தனக்கு உதவியாக சேலம் ஆத்தூரை சேர்ந்த வசந்த் (32) மற்றும் சிவகுமார் (34) என்பவர்களை பணிக்கு சேர்த்து கொண்டார். அப்போது அஸ்வின்குமார், சிவராஜிடம் வருமான வரித்துறையால் கைது செய்யப்படாமல் இருக்க உங்களது நிலத்தை எனது பெயருக்கு மாற்றித்தர வேண்டும் என கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து கோவில்பாளையம், பொள்ளாச்சி, உட்பட சில இடங்களில் உள்ள சிவராஜ் நிலத்தை அஸ்வின்குமார் தனது பெயருக்கு மாற்றிக் கொண்டார். மேலும், சிவராஜின் வங்கிக்கணக்கில் இருந்து அஸ்வின்குமார் பல கோடி ரூபாயை மாற்றி உள்ளார். அதேபோல், பல்வேறு இடங்களில் உள்ள சொத்துகளை போலி ஆவணங்கள் தயாரித்து மற்றவர்களுக்கு விற்பனை செய்து உள்ள தகவல் சிவராஜூக்கு தெரியவந்தது. இதுகுறித்து சிவராஜ், கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் அஸ்வின்குமார், வசந்த், சிவகுமார் மற்றும், 10 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரித்தனர். சுமார் ரூ.15 கோடி மதிப்பிலான சொத்துக்களை இவர்கள் மோசடியாக அபகரித்தது விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் சிவக்குமார், வசந்த் ஆகியோரை ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்தனர். தீவிர விசாரணையில் அஸ்வின்குமாரின் மனைவி ஷீலா (52), மகள் தீக்‌ஷா (29) மருமகன் சக்தி சுந்தர் (34), ஆகியோரும் இதில் உடந்தையாக இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்கள் மூவரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 8 பேரை தேடி வருகிறார்கள்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்