Logo
Logo

முக்கிய செய்தி:

பொது

சென்னையில் விமான கட்டணம் பலமடங்கு உயர்வு - ஓட்டு போட சொந்த ஊர் செல்ல அலைமோதிய கூட்டம்

SAMYUKTHA18-04-2024
சென்னையில் விமான கட்டணம் பலமடங்கு உயர்வு - ஓட்டு போட சொந்த ஊர் செல்ல அலைமோதிய கூட்டம்

சென்னை விமானநிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் இன்று காலை முதல் ஓட்டு போடுவதற்காக சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் இன்று ஒரே நாளில் விமான கட்டணங்கள் பலமடங்கு உயர்ந்துவிட்டன. எனினும், விமான டிக்கெட்டுகளுக்காக பயணிகளின் கூட்டம் அலைமோதி வருகிறது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை நடைபெறும் மக்களவை தேர்தலில் ஓட்டுப்போடுவதற்காக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் தென்மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான மக்கள், நேற்றிரவு முதல் கார், பேருந்து, வேன், ரயில், விமானங்கள் மூலமாக சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டு செல்கின்றனர். பேருந்து, ரயில்களில் சீட் கிடைக்காதவர்கள் இன்று காலை அவசரமாக விமானங்கள் மூலமாக சொந்த ஊர்களுக்கு செல்ல சென்னை விமானநிலையத்தில் குவிந்தனர். இதனால் வழக்கமான விமான கட்டணங்களும் பலமடங்கு உயர்ந்துவிட்டன. சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு வழக்கமான விமான கட்டணம் ₹3,957. ஆனால், இன்று ₹8,297 முதல் ₹12,716 வரை கட்டணம் அதிகரித்துள்ளது. சென்னையில் இருந்து மதுரைக்கு வழக்கமான கட்டணம் ₹3,674. இன்று ₹8,555 முதல் ₹11,531 வரை அதிகரித்துள்ளது. சென்னையில் இருந்து திருச்சிக்கு வழக்கமான கட்டணம் ₹2,382. இன்று ₹6,344 முதல் ₹8,507 வரை அதிகரித்துள்ளது. இதேபோல் சென்னையில் இருந்து கோவைக்கு வழக்கமான கட்டணம் ₹3,342. இன்றைய கட்டணம் ₹7,881 முதல் ₹8,616 வரை. சென்னையில் இருந்து சேலத்துக்கு வழக்கமான கட்டணம் ₹2,433. இன்றைய கட்டணம் ₹5,572. சென்னை உள்நாட்டு விமான முனையத்தில் இன்று விமான கட்டணங்கள் பலமடங்கு உயர்ந்திருந்தாலும், தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்குகளை பதிவு செய்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் ஏராளமான பயணிகள் கட்டணங்களை பற்றி கவலைப்படாமல் ஆர்வத்துடன் முன்பதிவு செய்து பயணிக்கின்றனர்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்