Logo
Logo

முக்கிய செய்தி:

குற்றம்

பைக்கில் சென்ற வாலிபரை வழிமறித்து ரூ.30 லட்சம் பறிப்பு - 4 பேர் கும்பலுக்கு வலை

SAMYUKTHA18-04-2024
பைக்கில் சென்ற வாலிபரை வழிமறித்து ரூ.30 லட்சம் பறிப்பு - 4 பேர் கும்பலுக்கு வலை

நாங்குநேரி அருகே பைக்கில் சென்ற வாலிபரை வழிமறித்து அரிவாள் முனையில் ரூ.30 லட்சம் பறித்து சென்ற 4 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் வானுமாமலை (35). கூலித்தொழிலாளி. இவர் நேற்று மாலை தனது பைக்கில் நாங்குநேரி தொழில்நுட்ப பூங்கா அருகே பட்டர்குளம் விலக்கு பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து 2 பைக்குகளில் 4 மர்ம நபர்கள் வந்துள்ளனர். மேலும் அவர்கள் வானுமாமலையின் பைக்கின் குறுக்காக தங்களது பைக்குகளை வழிமறித்து நிறுத்தினர். பின்னர் வானுமாமலையிடம் அரிவாள் மற்றும் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.30 லட்சத்தை பறித்துக்கொண்டனர். பின்னர் அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் 2 பைக்குகளிலும் பணத்துடன் தப்பிச்சென்றனர். இது குறித்து வானுமாமலை நாங்குநேரி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை பறித்துச்சென்ற மர்ம நபர்கள் 4 பேரையும் தேடி வருகின்றனர். இதற்கிடையே வானுமாமலைக்கு ரூ.30 லட்சம் எப்படி கிடைத்தது என ேபாலீசார் மற்றும் பறக்கும்படையினர் விசாரித்தனர். அப்போது அவர், தனக்கு கடன் இருப்பதாகவும் அதனை அடைக்க அந்த பணத்தை தனக்கு தெரிந்த நபரிடம் வட்டிக்கு வாங்கி வந்ததாகவும் தெரிவித்துள்ளார். எனினும் அவரது இந்த பதில் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் தன்னை மிரட்டி பணம் பறித்துச்சென்றது அதே பகுதியை சேர்ந்த செல்வக்குமார் உள்பட 4 பேர் தான் என்று வானுமாமலை போலீசில் அடையாளம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த 4 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அவர்களை பிடிபட்டால் மட்டுமே ரூ.30 லட்சம் எப்படி கிடைத்தது என்ற விபரம் தெரியவரும். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்