Logo
Logo

முக்கிய செய்தி:

குற்றம்

திருட வந்த வீட்டில் குரட்டை விட்ட வாலிபர் - மடக்கி பிடித்து தர்மஅடி

SAMYUKTHA18-04-2024
திருட வந்த வீட்டில் குரட்டை விட்ட வாலிபர் - மடக்கி பிடித்து தர்மஅடி

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே புலியூர்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் மோகன்தாஸ். வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் தூத்துக்குடியில் உள்ள மகள் வீட்டிற்கு சென்று இருந்தார். இந்தநிலையில் நாளை நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக தனது மனைவியுடன் மோகன்தாஸ் ஊருக்கு திரும்பினார். வீட்டிற்கு வந்தபோது முன்கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது வீட்டுக்குள் மின்விளக்குகள் எரிந்துகொண்டிருந்தது. இருப்பினும் சத்தம்போடாமல் உள்ளே சென்றபோது, வாலிபர் ஒருவர் பையில் சுத்தியல் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை வைத்துக்கொண்டு பதுங்கி இருப்பதை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார். இருப்பினும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு சத்தம்போடாமல் வெளியே சென்ற மோகன்தாஸ் உடனே தக்கலை போலீசாருக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். போலீசார் வருவதற்குள் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வீட்டுக்குள் பதுங்கிய கொள்ளையனை மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசாரிடம் கொள்ளையனை ஒப்படைத்தனர். போலீசாரிடம் பிடிபட்ட கொள்ளையனிடம் விசாரித்தனர். அப்போது அந்த வாலிபர் நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியை சேர்ந்த சிவசங்கர் என்பது தெரியவந்தது. திருட வந்த வாலிபர் மோகன் தாஸ் வீட்டுக்குள் யாரும் இல்லாததை அறிந்து கொண்டு வீட்டுக்கதவை உடைத்து உள்ளே புகுந்தார். பின்னர் அங்கிருந்து வெளியேற முயன்றபோது சுவர் ஏறி குதிக்க முயன்றபோது கீழே விழுந்து அடிபட்டுள்ளது. பலத்த காயத்தால் சிவசங்கரால் ஓட முடியவில்லை. இதனால் விடிந்ததும் தப்பித்துவிடலாம் என நினைத்த சிவசங்கர், திருடிய வீட்டுக்குள்ளேயே குட்டி தூக்கம் போட்டு உள்ளார். ஆனால், பாவம், வீட்டு உரிமையாளர் திரும்பி வருவார் என்று சிவசங்கர் எதிர்பார்க்கவில்லை. இதனால் ஓடவும் முடியாமல், ஒளியவும் முடியாமல் மாட்டிக்கொண்டார். சிவசங்கரை கைது செய்த போலீசார் சிகிச்சைக்காக அவரை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்