Logo
Logo

முக்கிய செய்தி:

குற்றம்

தனியார் கல்லூரி மேலாளரிடம் கத்திமுனையில் ரூ.1.50 கோடி கொள்ளை - 9 பேர் கைது... ரூ.43 லட்சம் ரொக்கம் பறிமுதல்

SAMYUKTHA18-04-2024
தனியார் கல்லூரி மேலாளரிடம் கத்திமுனையில் ரூ.1.50 கோடி கொள்ளை - 9 பேர் கைது... ரூ.43 லட்சம் ரொக்கம் பறிமுதல்

மயிலாப்பூர் சாய்பாபா கோயில் அருகே கடந்த 2ம் தேதி இரவு பைக்கில் சென்ற தனியார் கல்லூரி மேலாளரை கத்திமுனையில் வழிமறித்து ரூ.1.50 கோடி கொள்ளையடித்து சென்ற வழக்கில் 9 பேரை தனிப்படை போலீசார் கைது ெசய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.43 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை மயிலாப்பூர் குளக்கரை சாலையில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரி அலுவலகத்தில் மேலாளராக வினோத்குமார் பணியாற்றி வருகிறார். இவர் பணியாற்றும் கல்லூரி அதிபர் தற்போது தேசிய கட்சியில் உள்ளார். அவருக்கு சொந்தமான ரூ.1.50 கோடி ரொக்க பணத்துடன் மேலாளர் வினோத்குமார் பைக்கில் கடந்த 2ம் தேதி இரவு மயிலாப்பூர் சாய்பாபா கோயில் அருகே உள்ள அலமேலு மங்காபுரம் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். இதுகுறித்து முன்பே தகவல் அறிந்த மர்ம நபர்கள் 9 பேர், 4 பைக்குகளில் தனியார் கல்லூரி மேலாளர் வினோத்குமாரை பின் தொடர்ந்து, சாய் பாபா கோயில் அருகே கத்திமுனையில் வழிமறித்து ரூ.1.50 கோடி ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட தனியார் கல்லூரி மேலாளர் வினோத்குமார் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வாய் மொழியாக ரூ.1.50 கோடி ரொக்கம் கொள்ளையடித்து சென்றதாக புகார் அளித்தார். பிறகு எழுத்து பூர்வமாக புகார் அளிக்குமாறு போலீசார் அறிவுறுத்தினர். பிறகு வினோத் குமார் தன்னிடம் ரூ.2.50 லட்சம் பணத்தை பரித்து சென்றதாக புகார் அளித்தார். இரண்டு விதமாக புகார் அளித்ததால் போலீசார் கொள்ளையடிக்கப்பட்டது ரூ.1.50 கோடியா அல்லது ரூ.2.50 லட்சமா என விசாரணை நடத்தி வந்த நிலையில், பின்னர் கடந்த 6ம் தேதி மீண்டும் வினோத் குமார் தன்னிடம் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.1.50 கோடி என்றும், தேர்தல் நேரம் என்பதால், பணத்தை குறைத்து கூறியதாக தனது புகாரில் தெரிவித்திருந்தார். அதைதொடர்ந்து ரூ.1.50 கோடி பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் சிசிடிவி பதிவுகள் மூலம் விசாரணை நடத்தியதில், 9 பேர் கொண்ட கும்பல் திட்டமிட்டு பணத்தை பறித்து ெசன்றது உறுதியானது. பின்னர் தனிப்படை அமைத்து போலீசார் சிசிடிவி பதிவான காட்சிகளை வைத்து திருத்தணி மற்றும் அரக்கோணம் பகுதிகளில் பதுங்கி இருந்த வியாசர்பாடியை சேர்ந்த திலீப், தினேஷ்குமார், திருத்தணியை ேசர்ந்த நவீன், சுனில்குமார், வேலூர் பகுதியை சேர்ந்த விக்ரம், யோகேஷ், அசோக்குமார், இம்ரான், உலகநாதன் ஆகிய 9 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.43 லட்சம் ரொக்கம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 4 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்