Logo
Logo

முக்கிய செய்தி:

குற்றம்

கள்ளச்சாவி போட்டு கார்கள் திருட்டு - 8 பேர் கும்பல் கைது... 3 கார் பறிமுதல்...

SAMYUKTHA18-04-2024
கள்ளச்சாவி போட்டு கார்கள் திருட்டு - 8 பேர் கும்பல் கைது... 3 கார் பறிமுதல்...

சென்னை ராயபுரத்தில் செல்போன் ஆப் மூலம் கார்களை விற்பதுபோல் விற்று கள்ளச்சாவி போட்டு கார்களை திருடி வந்த 8 பேர் கும்பல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக் கப்பட்டனர். இவர்களிடம் இருந்து 3 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வடசென்னை ராயபுரம் ஆதாம்தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (30). இவர், சில மாதங்களுக்கு முன்பு செல்போன் ஆப்மூலம் உயர்ரக காரை ஒன்றை 8 லட்ச ரூபாய்க்கு வாங்கியுள்ளார். சில நாட்களில் கார் திருடுபோனது. இதுகுறித்து ராயபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வந்தனர். இதில், தனியார் கார் விற்பனை ஆப் மூலம் காரை விற்பதுபோல் விற்று கள்ளச்சாவி மூலம் விற்பனை செய்த கும்பலே காரை திருடி சென்றது தெரியவந்தது. மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு செய்து விசாரணை நடத்திய தில், தமிழகம் முழுவதும் கார்களை விற்று மோசடியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த டிரைவர் ஹரிஹர முகேஷ் (29), திரு நெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தாலுகா புதூரை சேர்ந்த டிரைவர் உலகநாதன் (46), திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டை சேர்ந்த சுரேஷ் (40), தேனி மாவட்டம் உத்தமப்பாளையம் பகுதியை சேர்ந்த டேவிட் பிரகாஷ் (29), ஆண்டிப்பட்டியை சேர்ந்த ராஜபாண்டி (25), பாளையங்கோட்டையை சேர்ந்த பாலாஜி (34), கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் விளவங்கோடு பகுதியை சேர்ந்த பீட்டர் ரகுராஜ் (50), நாகர்கோவிலை சேர்ந்த ஜெயராம் (43) ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 3 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து கைது செய்யப்பட்ட 8 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல்சிறையில் அடைத்தனர். மேலும் இவர்கள் எங்கெல்லாம் காரைகளை விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டார்கள் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்தப்போவதாக போலீசார் தெரி வித்துள்ளனர். கஸ்டடி விசாரணைக்கு பிறகு கார் கடத்தல் கும்பலுடன் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்பது தெரியவரும் எனவும் போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் ராயபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்