Logo
Logo

முக்கிய செய்தி:

பொது

எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜவுக்கு 2 ஓட்டுகள் - மாதிரி வாக்குப்பதிவில் பரபரப்பு... காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் புகார்...

SAMYUKTHA18-04-2024
எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜவுக்கு 2 ஓட்டுகள் - மாதிரி வாக்குப்பதிவில் பரபரப்பு... காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் புகார்...

காசர்கோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மாதிரி வாக்குப்பதிவில் எந்த பட்டனை அமர்த்தினாலும் பாஜவுக்கு 2 ஓட்டுகள் விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரளவில் உள்ள 20 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு வருகிற 26ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில், காசர்கோடு நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் தற்போதைய எம்பி ராஜ்மோகன் உண்ணித்தானும், இடதுசாரி கூட்டணி சார்பில் எம்.வி. பாலகிருஷ்ணனும், பாஜ கூட்டணி சார்பில் எம்.எல்.அஷ்வினியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் காசர்கோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாதிரி வாக்குப்பதிவு நடந்தது. அதில், அனைத்துக் கட்சி வேட்பாளர்களின் ஏஜென்டுகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முதலில் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படும் 190 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் பரிசோதிக்கப்பட்டன. பின்னர் முதல் கட்டமாக 20 இந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. ஒரு இயந்திரத்தில் ஓட்டு போட 10 முறைகள் உள்ளன. ஒவ்வொரு முறையிலும் பரிசோதித்தபோது 4 இயந்திரங்களில் எந்த கட்சிக்கு வாக்களித்தாலும் பாஜவிற்கு 2 ஓட்டுகள் விழுந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து இந்த இயந்திரங்களை மாற்ற வேண்டும் என்று கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களின் ஏஜென்டுகள் கூறினர். மேலும் இதுகுறித்து இரு கட்சிகளின் சார்பில் காசர்கோடு மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான இன்பசேகருக்கு புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பாஜவினர் தில்லுமுல்லு செய்து வருகின்றனர் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறனர். இந்தநிலையில் காசர்கோட்டில் தற்போது நடைபெற்ற மாதிரி வாக்குப்பதிவில் பாஜவுக்கு வாக்களிக்காமலே வாக்கு பதிவான சம்பவம் பெரும் பரபரபபை ஏற்பத்தி உள்ளது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்