Logo
Logo

முக்கிய செய்தி:

குற்றம்

முதியவரின் வீட்டை உடைத்து 50 சவரன் துணிகர கொள்ளை - ரவுடி உட்பட 2 பேர் கைது

SAMYUKTHA27-04-2024
முதியவரின் வீட்டை உடைத்து 50 சவரன் துணிகர கொள்ளை - ரவுடி உட்பட 2 பேர் கைது

தாம்பரம் அருகே முதியவர் வீட்டை உடைத்து 50 சவரன் கொள்ளையடித்து தப்பிய ரவுடி, டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரங்கராஜ் (67). இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது தந்தையின் 100வது பிறந்தநாள் விழாவிற்காக வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் மயிலாப்பூர் சென்றுள்ளார். இந்நிலையில் ரங்கராஜ் வீட்டின் கதவு திறந்தநிலையில் இருப்பதாக அவரது வீட்டின் எதிரில் வசிப்பவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் ரங்கராஜன் வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 50 சவரன் தங்க நகை திருடுபோனது கூறப்படுகிறது. இதுகுறித்து சிட்லப்பாக்கம் போலீசில் ரங்கராஜ் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். சம்பவத்தன்று கார் ஒன்று வந்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து கார் எண்ணை வைத்து மதுரை, விருதுநகர் உள்ளிட்ட இடங்களில் போலீசார் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்த கார் ஓட்டுனர் குமரன் (44) என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்தபோது, இவரும், திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த செந்தில் (எ) வெள்ளை செந்தில் (45) என்பவர் காரை புக் செய்து செம்பாக்கம், ராஜகீழ்ப்பாக்கம், சிட்லப்பாக்கம் பகுதிகளில் திருட வீடுகளை நோட்டமிட்டதும் ரங்கராஜ் வீட்டில் யாரும் இல்லாததால் இரவு நேரத்தில் அங்கு வந்து பூட்டை உடைத்து 50 சவரன் தங்க நகையை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து குமரன் கொடுத்த தகவலின்பேரில் வெள்ளை செந்திலை போலீசார் கைது செய்தனர். இவர் மீது 4 கொலை வழக்கு, 10 கொலை முயற்சி வழக்குஉள்ளிட்ட 30 வழக்குகள் இருப்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்