Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

முகநூலில் ஒவ்வொரு வார்த்தையையும் பிரதமர் கவனமாக பேசவேண்டும் - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

SAMYUKTHA28-04-2024
முகநூலில் ஒவ்வொரு வார்த்தையையும் பிரதமர் கவனமாக பேசவேண்டும் - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் கோடைக்கால சிறப்பு குளிர்பான தண்ணீர் பந்தலை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேம லதா விஜயகாந்த் திறந்து வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

தமிழக முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. அக்னி நட்சத்திரம் மற்றும் ரெட் அலர்ட் கொடுக்கும் அளவிற்கு வெயிலின் தாக்கம் உள்ளது. மக்களின் கஷ்டத்தை போக்கும் வகையில் தேமுதிக சார்பில் தலைமை அலுவலகத்தில் தண்ணீர் பந்தல் திறந்துள்ளோம். இதுபோல் தமிழகம் முழுவதும் தண்ணீர் பந்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஜூன் மாதத்துக்கு பள்ளி திறப்பை தள்ளி வைக்கலாம். தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரனுக்கு பெரும்பாலான மக்கள் வாக்களித்துள்ளனர். சென்னையில் பொறுத்தவரை பல்வேறு நபர்களுக்கு வாக்குப்பதிவு இல்லை. தேர்தலுக்கு முன்பாகவே வாக்குச்சீட்டில் பெயர் உள்ளதா? என்பதை பார்க்கவேண்டும். ஜனநாயக கடமையாற்றுவது ஒவ்வொருவரின் உரிமை. தேர்தல் ஆணையம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தும் பெரும்பாலானோர் வாக்களிக்கவில்லை. ஆதார் கார்டு உள்ளது போல் ஒவ் வொரு நபர்களும் வாக்களிக்கவேண்டும் என்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்யவேண்டும். நீலகிரி ஸ்ட்ராங் ரூமில் 4 மணி நேரம் சிசிடிவி கேமரா வேலை செய்யவில்லை என்பது கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும். பிரதமரின் வார்த்தை ஒவ்வொன்றும் உன்னிப்பாக கவனிக்கப்படக்கூடியவை. இதனால் அவர் கவனமாக பேசவேண்டும். பாஜக என்றால் இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்கள் என்றநிலை இருக்கக்கூடிய சூழ்நிலையில் முகநூலில் ஒவ்வொரு வார்த்தையும் கவனமாக பேசவேண்டும். ஆணவ படுகொலை நடப்பது கண்டிக்கத்தக்கது. மே 9ம்தேதி விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருது வழங்க உள்ளது ஒன்றிய அரசு. சென்னையில் மிக குறைவான வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது தலைகுனிவான நிகழ்வு. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்