Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

இட ஒதுக்கீட்டுக்கு ஆர். எஸ். எஸ். ஆதரவு: "தேவைப்படும் வரை நீட்டிக்கப்பட வேண்டும்" ; மோகன் பகவத் அறிவிப்பு

CHENDUR PANDIAN.K28-04-2024
இட ஒதுக்கீட்டுக்கு ஆர். எஸ். எஸ். ஆதரவு: "தேவைப்படும் வரை நீட்டிக்கப்பட வேண்டும்" ; மோகன் பகவத் அறிவிப்பு

ஹைதராபாத்

இட ஒதுக்கீட்டுக்கு ஆர் எஸ் எஸ் இயக்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. தேவைப்படும் வரை இட ஒதுக்கீடு நீட்டிக்கப்பட வேண்டும் என்று ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் அறிவித்திருக்கிறார்.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் பிரசாரம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், இட ஒதுக்கீடு தொடர்பாக பாஜக கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு இடையே வார்த்தை போர் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் தாய் அமைப்பான ராஷ்டிரிய சுயம் சேவக் சங் (ஆர் எஸ் எஸ்) தலைவர் மோகன் பகவத் இன்று ஹைதராபாத்தில் கல்வி நிறுவனம் ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

"ஆர் எஸ் எஸ் இயக்கம் இட ஒதுக்கீட்டிற்கு எதிரானது என்றும் இதைப் பற்றி வெளியில் பேச முடியாது என்றும் ஒரு வீடியோ பரப்பப்படுகிறது. இது அப்பட்டமான பொய்.

அரசியல் சட்டப்படி அனைத்து இட ஒதுக்கீடுகளையும் இயக்கம் தொடக்கத்தில் இருந்தே ஆதரித்து வருகிறது. இது தொடர்பாக ஆரம்பத்தில் இருந்தே சிலர் தவறான வீடியோ பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

சமூகத்தில் பாகுபாடு இருக்கும் வரை இட ஒதுக்கீடு தொடர வேண்டும் என்று கடந்த ஆண்டு நாக்பூரில் ஆர் எஸ் எஸ் இயக்கம் அறிவிப்பு இருந்தது. இதில் எந்த மாற்றமும் இல்லை. கண்ணுக்குத் தெரியாததாக இருந்தாலும் சமூகத்தில் பாகுபாடு நிலவி வருவதை யாராலும் மறுக்க முடியாது".

இவ்வாறு மோகன் பகவத் கூறினார்.

ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்.

சமீபத்தில் வயநாட்டில் பேசிய அவர் பாஜகவும் ஆர் எஸ் எஸ்சும் நாட்டின் பன்முகத்தன்மையை அழிக்க முயற்சி செய்வதாக குற்றம் சாட்டியிருந்தார்.

தற்போது "மக்கள் தங்கள் மதத்தை பின்பற்றவோ அல்லது அவர்களின் மரபுகளை பின்பற்றவோ பயப்படுவதாகவும் " அவர் குறிப்பிட்டு இருந்தார்.

அதே நேரத்தில், இந்திய அரசியலமைப்பை மாற்ற காங்கிரஸ் கட்சி அனுமதிக்காது. ஒவ்வொரு இந்தியரையும் அவர்களின் சமூகம் மதம் மற்றும் மாநிலத்தை பொருட்படுத்தாமல் பாதுகாப்பது காங்கிரஸின் புனித கடமை" என்றும் அவர் கூறி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்