Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

கெஜ்ரிவால் சிறையில் அடைக்கப்பட்டது பற்றிய பிரசார பாடல்: தேர்தல் ஆணையம் அதிரடி தடை

CHENDUR PANDIAN.K28-04-2024
கெஜ்ரிவால் சிறையில் அடைக்கப்பட்டது பற்றிய பிரசார பாடல்: தேர்தல் ஆணையம் அதிரடி தடை

புதுடெல்லி

டெல்லி முதல் அமைச்சர் கெஜ்ரிவால் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டது பற்றிய பிரசார பாடலுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி அமைச்சருமான அதிஷி, மத்திய பாஜக அரசுக்கு எதிராக இந்த குற்றச்சாட்டை இன்று வெளியிட்டார்.

இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், "சர்வாதிகார ஆட்சியில் எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்ய விடாமல் தடுக்கப்படுவதாக' தெரிவித்தார். "இதுதான் இன்று நடந்துள்ளது.

இது பாஜகவின் மற்றொரு ஆயுதம்" என்று கூறி, பிரச்சார பாடலுக்கு தடை விதிக்கப்பட்ட தேர்தல் ஆணையத்தின் கடிதத்தை காட்டினார்.

பேட்டியின்போது அவர் மேலும் கூறுகையில், "பாஜக தினசரி நடத்தை விதிகளை மீறுவதை தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளவில்லை. ஆனால் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்கள் மூச்சு விட்டால் கூட நோட்டீஸ் வரும்" என்றார்.

பின்னர் தனது சமூக வலைதளப் பகுதியில், "சர்வாதிகார அரசுகளள் மட்டுமே எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்வதிலிருந்து தடுக்கப்படுகின்றன. இன்று பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் சர்வாதிகாரப் போக்கின் மற்றொரு ஆதாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆம் இப்போது எங்கள் கட்சியின் பிரசார பாடலான 'ஜெயில் காஜா ஜவாப் ஓட் சே' பாடலையும் (கெஜ்ரிவால் சிறையில் அடைக்கப்பட்டது குறித்த பாடல்) தேர்தல் ஆணையம் தடை செய்து இருக்கிறது" என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

அவர் மேலும் கூறுகையில், " ஒரு சர்வாதிகார கட்சி தேர்தல் செயல்முறை மற்றும் மாதிரி விதிகளை மீறும் போது தேர்தல் ஆணையத்துக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் தேர்தல் ஆணையத்தின் விதிகள் அமலுக்கு வந்த பிறகும் இ.டி மற்றும் சிபிஐயை பாஜக தவறாக பயன்படுத்தி கெஜ்ரிவாலை கைது செய்யும் போது தேர்தல் ஆணையம் அமைதியாக இருக்கிறது. ஆனால் இந்த சர்வாதிகாரம் குறித்து யாராவது பாட்டு எழுதினால் ஆணையும் உஷாராகி விடுகிறது" என்றார்.

ராப் இசைப் பாணியில் பாடப்பட்ட இந்த பிரசார பாடல் கடந்த வியாழக்கிழமை டெல்லியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. ஆம் ஆத்மி எம் எல் ஏ வும் சட்டமன்றத்தில் கட்சியின் தலைமை கொறடாவுமான திலீப் பாண்டே இந்த பாடலை எழுதி இசையமைத்திருக்கிறார்.

டெல்லி அரசின் 2021 - 22 ஆம் ஆண்டு கலால் கொள்கையில் முறைகேடுகள் செய்ததாக கூறி, கடந்த மார்ச் 21ஆம் தேதி மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகளால் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்