Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

ஒடிசா; பாஜகவில் சேர்ந்த பிஜு ஜனதா தள தலைவர்கள்

PRIYA28-04-2024
ஒடிசா; பாஜகவில் சேர்ந்த பிஜு ஜனதா தள தலைவர்கள்

மக்களவைத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலையும் சந்திக்க உள்ள ஒடிசாவில், பிஜு ஜனதா தள கட்சியைச் சேர்ந்த தலைவர்களும் தொண்டர்களும் பாஜகவில் இணைந்துள்ளனர்.

முன்னாள் பிஜேடி தலைவர் ரீனா டான்டி மற்றும் அவரது கணவர் மோதிலால் டான்டியும் இன்று பாஜகவில் இணைந்தனர். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர்.

இவர்கள் கட்சியில் இணைந்ததால் ஒடிசா அரசியலில் புதிய அத்தியாயம் தொடங்கி இருப்பதாக தனது எக்ஸ் பக்கத்தில் பிரதான் வரவேற்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக சனிக்கிழமை பாஜகவில் இணைந்தவர்கள் பற்றி தர்மேந்திர பிரதான் கூறுகையில், “ஒடிசா மாற்றத்தை நோக்கி செல்லத் தொடங்கி உள்ளது. பாஜகவின் பிரதமர் நரேந்திர மோடி, மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. அதனால், பிஜு ஜனதா தளம் மற்றும் பிற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பாஜகவில் இணைந்து வருகின்றனர். மாநிலத்தின் வளர்ச்சிக்கு உழைக்காமல் ஊழல் செய்துவரும் நபர்களால் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.”, என்றார்.

சம்பல்பூர் தொகுதியில் தர்மேந்திர பிரதான் போட்டியிடுகிறார். 15 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு இவர் தேர்தலில் போட்டியிடுகிறார். இவருடைய தொகுதியில் மே 25ம் தேதி வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது.

பால்லஹடா சட்டமன்றத் தொகுதியில் சனிக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் பிஜேடி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பாஜகவில் இணைந்தனர்.

பாஜகவும் பிஜு ஜனதா தள கட்சியும் 15 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனித்தனியே போட்டியிடுகின்றன. இந்நிலையில் பிஜேடியில் இருந்து தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர்.

ஒடிசாவில் மே 13ம் தேதி தொடங்கி 4 கட்டங்களாக சட்டமன்றம் மற்றும் மக்களவைத் தேர்தல் நடக்க உள்ளது. இதன் முடிவுகள் வரும் ஜூன் மாதம் 4ம் தேதி வெளியாகிறது. கடந்த 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பிஜேடி 12 தொகுதிகளிலும், பாஜக 8 தொகுதிகளிலும் காங்கிரஸ் ஒரே ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்