Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

இண்டியா கூட்டணிக்கு பின்னடைவு: பாஜகவில் இணைந்த சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்எல்ஏ, நிர்வாகிகள்

PRIYA28-04-2024
இண்டியா கூட்டணிக்கு பின்னடைவு: பாஜகவில் இணைந்த சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்எல்ஏ, நிர்வாகிகள்

இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்எல்ஏவும் பல மாவட்டங்களின் தலைவர்களும் ஞாயிற்றுக் கிழமை பாஜகவில் இணைந்துள்ளனர். பாஜகவுக்கு எதிராக போராடி வரும் இண்டியா கூட்டணிக்கு இது மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.

முன்னாள் சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ ஜெய் சொவ்பே , பலராம் யாதவ், ஜகத் ஜெய்ஸ்வால் உள்ளிட்ட தலைவர்கள் , பாஜகவின் உத்தரபிரதேச துணை முதல்வர் பிரஜேஷ் பதக் முன்னிலையில் இணைந்தனர்.

இது குறித்து பதக் தனது எக்ஸ் தளத்தில், “முன்னாள் எம்எல்ஏவும், பல மாவட்டத் தலைவர்களும் கட்சியில் இணைந்துள்ளனர். அவர்களை வரவேற்கிறோம். அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். அவர்கள் கையில் பெரும் பொறுப்பு உள்ளது.“ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “ பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் பாஜகவில் இணைய நீங்கள் முடிவு செய்துள்ளீர்கள். பாஜக சாதாரண மக்களையும் சென்றடைந்து விட்டது. பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின் படி வளச்சியடைந்த இந்தியாவை உருவாக்க தீர்மானம் எடுத்துள்ளோம். நீங்களும் அதில் உங்கள் பங்களிப்பை செய்வீர்கள் என நம்புகிறேன்.”, என பதக் கூறியுள்ளார்.

நாட்டிலேயே அதிகபட்சமாக 80 மக்களவைத் தொகுதிகளை கொண்ட மாநிலமான உத்தரபிரதேசத்தில் 7 கட்டங்களிலும் தேர்தல் நடக்கிறது. ஏப்ரல் 19ம் தேதி 8 தொகுதிகளிலும், ஏப்ரல் 26ம் தேதி 8 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.

பாஜகவுக்கு எதிரான இண்டியா கூட்டணி கட்சிகளான காங்கிரசும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியும் சுமூகமாக தொகுதி பங்கீடு செய்து கொண்டு தேர்தலை சந்திக்கின்றன. இந்நிலையில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்