Logo
Logo

முக்கிய செய்தி:

பொது

தமிழகத்தில் 1000 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் விநியோகிக்க உத்தரவு - வெயிலின் தாக்கம் தீவிரம்

SAMYUKTHA28-04-2024
தமிழகத்தில் 1000 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் விநியோகிக்க உத்தரவு - வெயிலின் தாக்கம் தீவிரம்

வெயிலின் தாக்கம் தீவிரமாக இருப்பதால் தமிழகத்தில் 1000 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் என்று கூறுப்படும் உப்பு - சர்க்கரை கரைசல் பாக்கெட்டுகளை விநியோகிக்க பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

இந்தாண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்தாண்டு கோடைகாலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கிவிட்டது. கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே சுமார் ஒரு மாத காலமாக கோடை வெளில் சுட்டெரித்து வருகிறது. இந்தாண்டு வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும், அடிக்கடி வெப்ப அலையும் வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து வருகிறது. அதற்கு ஏற்பவே வெயிலின் உக்கிரமும் தினமும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வரும் நாட்களில் தமிழக உள் மாவட்டங்களில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும் வாய்ப்புள்ளது. இதனால் அவ்வபோது ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து எச்சரிக்கை விடத்து வருகிறது. இந்நிலையில் வெயிலின் தாக்கம் தீவிரமாக இருப்பதால் தமிழகத்தில் 1000 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் என்று கூறுப்படும் உப்பு - சர்க்கரை கரைசல் பாக்கெட்டுகளை விநியோகிக்க பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பொதுச்சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது : வெப்ப அலை எதிரொலியாக தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் என்று கூறுப்படும் உப்பு - சர்க்கரை கரைசல் பாக்கெட்டுகளை வழங்கும் மையம் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்டத்தை பொறுத்த தலா 15 முதல் 25 மையங்கள் என தமிழ்நாட்டில் 46 சுகாதார மாவட்டங்களிலும் 1000 மையங்களை ஏற்படுத்தி பொது மக்களுக்கு தேவையான ஓஆர்எஸ் கரைசல் என்று கூறுப்படும் உப்பு - சர்க்கரை கரைசல் பாக்கெட்டுகளை வழங்க மாவட்ட சுகாதார அதிகாரி உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் சுகாதாரமான தூய்மையான குடிநீர் கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும். சென்னையில் மட்டும் 75 இடங்களில் மட்டும் 75 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் என்று கூறுப்படும் உப்பு - சர்க்கரை கரைசல் பாக்கெட்டுகள் வழங்கும் மையங்களை ஏற்படுத்த வேண்டும். இந்த 1000 மையங்களும் ஜூன் மாதம் 30ம் தேதி வரை செயல்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்