Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

ஜேடிஎஸ் தலைவர் ஆபாச வீடியோ விவகாரம்; பிரதமர் அமைதி காப்பது ஏன்? – பிரியங்கா காந்தி கேள்வி

PRIYA29-04-2024
ஜேடிஎஸ் தலைவர் ஆபாச வீடியோ விவகாரம்; பிரதமர் அமைதி காப்பது ஏன்? – பிரியங்கா காந்தி கேள்வி

கர்நாடகா மாநில மதச்சார்பற்ற ஜனதா தள (ஜேடிஎஸ்) தலைவரும் முன்னாள் பிரதமர் தேவே கவுடாவின் பேரனுமான பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ வெளியான விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி அமைதி காப்பது ஏன்? என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா கேள்வி எழுப்பி உள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் ஹசன் தொகுதியின் ஜேடிஎஸ் வேட்பாளராக பிரஜ்வல் ரேவண்ணா அறிவிக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில் அவர் பல பெண்களிடம் பாலியல் அத்துமீறல் செய்த வீடியோ வெளியாகி பரபரப்பைக் கிளப்பி உள்ளது. இதில் பல பெண்கள் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை கர்நாடகா அரசு அமைத்த சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி) விசாரணை நடத்தி வருகிறது. சமூக ஊடகங்களில் தீயாய் பரவி உள்ள வீடியோ, கர்நாடக அரசியல் தளத்தில் பிரச்சாரத்தின் பாதையையே மாற்றி விட்டது.

கர்நாடகாவில் பாஜக, ஜேடிஎஸ் கட்சிகள் இணைந்து தேர்தலைச் சந்திக்கும் நிலையில், நூற்றுக்கணக்கான பெண்கள் பாதிக்கப்பட்ட இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தொடர்ந்து அமைதி காப்பதை பற்றி கேள்வி எழுப்பி உள்ளார்.

அவர் தனது பதிவில் கூறியிருப்பதாவது –

பிரதமர் மோடி, யார் தோள்பட்டையில் கை போட்டு போட்டோ எடுத்தாரோ, தேர்தலுக்கு 10 நாட்கள் முன்பு யாருக்காக பிரதமர் பிரச்சாரம் செய்தாரோ, மேடையில் யாரைப் புகழ்ந்து பேசினாரோ, கர்நாடகாவைச் சேர்ந்த அந்த தலைவர் தான் தற்போது நாட்டை விட்டு தலைமறைவாகி உள்ளார். அந்த குற்றம்பற்றி கேட்டாலே இதயம் பதைபதைக்கிறது. நூற்றுக்கணக்கான பெண்களின் வாழ்க்கையை அவர் பாழாக்கி உள்ளார். மோடி அவர்களே, நீங்கள் தொடர்ந்து அமைதி காக்க போகிறீர்களா?

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த பிரச்சினை பற்றி பேசிய மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என்றார். மேலும், யார் குற்றம் செய்தாலும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்