Logo
Logo

முக்கிய செய்தி:

பொது

சுட்டெரிக்கும் வெயில் பரிதவிக்கும் மக்கள்! இந்தியாவில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க காரணம் என்ன?

PRITHIVIRAJ28-04-2024
சுட்டெரிக்கும் வெயில் பரிதவிக்கும் மக்கள்! இந்தியாவில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க காரணம் என்ன?

வெப்ப அலையின் பிடியில் இந்தியா சிக்கி தவித்து வருகிறது. தென் மாநிலங்களான தமிழகம், ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா, கேரளா, ஒடிசா ஆகியவற்றில் இதுவரை இல்லாத அளவாக வெயின் கொடுமை மக்களை வாட்டி வதைத்து வருகிறது

உச்சபட்ச அளவுக்கும் அதிகமாக வெயிலின் தாக்கம் இருப்பதால் மக்கள் பகல் நேரங்களில் வெளியே வருவதற்கே அஞ்சுகிறார்கள். இதுவரை பார்த்திராத அளவாக, உணராத அளவாக வெப்பம் இருப்பதால் மக்கள் சிரமங்களைச் சந்தித்து வருகிறார்கள்.

ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேஷ்வரில் இந்த கோடைகாலத்தில் வெயில் அதிகபட்சமாக 44 டிகிரி செல்சியாக உயர்ந்தால், அங்குள்ள மக்கள் பரிதவித்து வருகிறார்கள். வெயிலின் கொடுமையோடு சேர்ந்து வெப்ப அலையும் வீசுவதால், மக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தால், அதன்பின் மழைபெய்து, சூழலை இதமாக்கும்.

heat2.jpg

ஆனால், இந்த பருவகாலத்தில் வெயில் மட்டும் தொடர்ந்து அடித்து வருகிறது, மழைக்கு வாய்ப்பே இல்லை. வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், ஹீட்ஸ்ட்ரோக், டீஹைட்ரேஷன் போன்ற பாதிப்புக்கு மக்கள் ஆளாக நேரிடும் என்று அரசு எச்சரித்துள்ளது.

ஆந்திரப்பிரதேசத்தில் வெயில் கொடுமை ஒடிசாவைவிட மோசமாக இருக்கிறது. இங்கு கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெயிலின் தாக்கம் படுமோசமாக இருப்பதாக மக்கள் உணர்கிறார்கள். இந்த பருவகாலத்தில் வெயிலின் தாக்கம் அதிகபட்சமாக 45 டிகிரி செல்சியஸ் வரை அதாவது 113 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் அதிகரித்துள்ளது.

ஆந்திராவில் நிலவும் வெப்பஅலை ஆபத்தானது, மோசமானதாக இருக்கிறது என்று ஆந்திர அரசு அறிவித்துள்ளது. ஆந்திராவில் உள்ள 58 நிர்வாக மண்டலங்களிலும் வெயின் கொடுமை மக்களை வாட்டி வதைத்து வருகிறது. வெயிலின் தாக்கத்தைப் போக்க, வெப்ப அலை தடுப்பு மையங்கள், குடில் வசதி, மருத்துவ வசதி மையங்களை மாநில அரசு அமைத்துள்ளது.

கர்நாடக மாநிலத்திலும் வெப்ப அலை கடந்த சில நாட்களாக மக்களை வதைத்து வருகிறது. பெங்களூருவில் அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் வரை வெயில் கொளுத்துகிறது.

heat wave.jpg

பெங்களூருவில் எப்போதும் இதமான காலநிலை நிலவும் நிலையில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பத்தை தாங்க முடியாமல் மக்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் ஆதங்கத்தை, மனக்குமுறலை வெளிப்படுத்தி வருகிறார்கள். போக்குவரத்து நெரிசலுக்கு பெயரெடுத்த பெங்களூருவில், வெயில்தாக்கத்தைத் தாங்கிக்கொண்டு போக்குவரத்து நெரிசலில் மக்கள் அனுபவித்து வருகிறார்கள்.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம்தான் மாநிலத்திலேயே வெயிலால் மோசமாக பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த மாவட்டத்தில் வழக்கத்துக்கு மாறாக 5 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்துள்ளது.

இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் “ கேரள மாநிலத்தில் மலைப்பிரதேசங்களைத் தவிர்த்து, மற்ற சமவெளிப்பகுதியில் கடும் வெப்பம் மற்றும் தாங்க முடியாத வெயில் இருக்கும். அதிகபட்ச வெப்பத்தை அடுத்த சில நாட்களில் கடக்க நேரிடலாம். அதிகபட்சமாக 41.9 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவான நிலையில் அதைக்கடந்து செல்லக்கூடும் என்று எச்சரித்துள்ளது.

பாலக்காடு தவிர்த்து கோழிக்கோடு, மலப்புரம், திருச்சூர், கொல்லம், காசர்கோடு மாவட்டங்களில் வெப்பம் 2 டிகிரி செல்சியஸ் முதல் 5.5 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இந்த வெப்ப அலை, கடும் வெயில் மக்களுக்கு சொல்ல முடியாத துன்பங்களை அளித்து வருகிறது குறிப்பாக சாலை மார்க்கம் செல்வோர் கடும் அவதிக்குள்ளாகிறார்கள். போக்குவரத்து நெரிசலும் சேரும்போது, பல இடங்களில் வெப்பம் மேலும் அதிகரித்துள்ளது.

குறிப்பாக என்ஹெச்-16 பல்வேறு நகரங்களை இணைக்கும் முக்கிய சாலை இங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படும்போது வாகனங்களின் வெப்ப புகை, கார்பன்டை ஆக்ஸோடு ஆகியவை சேர்ந்து வெப்பம் அதிகமாக உமிழப்படுகிறது.

வெப்பத்தின் தாக்கம் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும்

இந்திய வானிலை மையத்தின் அறிவிப்பின்படி, “ நாட்டின் பல்வேறு மாநிலங்களான ஒடிசா, ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா, தமிழகம், கேரளாவில் அடுத்த 24 மணிநேரத்துக்கும், அடுத்தசில நாட்களுக்கும் வெப்ப அலை வீசக்கூடும். இந்த மாநிலங்களில் வெப்பம் அதிகபட்சமாக 45 டிகிரி செல்சியஸ்வரை அல்லது அதற்கும் மேல் இடங்களில் அதிகரிக்கலாம்.

நாட்டின் பல்வேறு இடங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை கடுமையாக இருக்கும், வெப்பம் அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாகவே பல இடங்களில் நிலவும். வடகிழக்கு மாநிலங்கள், அந்தமான் நிகோபர் தீவுகளில் அடுத்த சில நாட்களில் மழை பெய்யக்கூடும். கிழக்கு மாநிலங்கள், அந்தமான் நிகோபர் தீவுகளில் அடுத்த சில நாட்களில் இடியுடன் கூடிய மழைக்கும் வாய்ப்புள்ளது.

500x300_1882945-summarheat.webp

**வடஇந்தியா: **

வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களான டெல்லி, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தானில் வெயின் தாக்கம் அதிகமாக இருக்கும். சில இடங்களில் வெப்பம் 45 டிகிரிக்கும் செல்சியஸுக்கும் அதிகமாகப் பதிவாகலாம்.

தென் இந்தியா

தென் இந்திய மாநிலங்களான தமிழகம், கர்நாடகம், கேரளா, ஆந்திரா, தெலங்கானாவில் வெப்ப அலை அடுத்த சில நாட்களுக்கு வீசக்கூடும். பல இடங்களில் வெயில் 45 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாகப் பதிவாகலாம்.

கிழக்கு இந்தியா:

மேற்கு வங்கம், ஒடிசா உள்ளிட்ட பகுதிகளில் அடுத்த சில நாட்களில் ஒரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வடகிழக்கு இந்தியா

வடகிழக்கு இந்தியாவில் குறிப்பாக அசாம், மேகாலயா, நாகாலாந்து ஆகியவற்றில் இடியுடன் கூடிய மழை பல இடங்களில் பெய்யக்கூடும்.

வெயிலின் தாக்கம் அதிகரிக்க காரணம் என்ன

heat1.jpg

வெயின் தாக்கம் திடீரென அதிகரித்தமைக்கு சரியான காரணம் இதுவரை அறிவியல் வல்லுநர்களுக்கு தெரியவில்லை. இருப்பினும் கடல்மட்டத்தில் கடந்த ஓர் ஆண்டாக அதிகரித்துவரும்வெப்பம் இந்த வெயில் அதிகரிப்புக்கு காரணமாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

கடலில் வெப்பம் சராசரியாக 20.96 டிகிரி செல்சியஸ் இருக்கும், ஆனால், தற்போது 20.95.டிகிரி செல்சியஸைக் கடந்துவிட்டது. அமெரிக்காவில் ப்ளோரிடாவில் 38 டிகிரி செல்சியஸைத் தொட்டு புதிய சாதனை படைத்துள்ளது. வடக்கு அட்லாண்டிக் கடலிலும் இதற்குமுன் இல்லாத அளவுக்கு வெப்பம் அதிகரித்துள்ளது.

இந்த அளவு வெப்பம் அதிகரித்தமைக்கு எல்நினோ காரணியாக இருக்கும் என்று அறிவியல்விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். கடந்த ஓர் ஆண்டாக பசிபிக் கடலில் நிலவும் எல்நினோ காலநிலைதான் வெப்பம் அதிகரிக்க காரணம், எல்நினோதான் கடலின் வெப்பத்தை உயர்த்த உந்துசக்தியாக இருக்கிறது. அதன் காரணமாக கடலின் மேல்பட்ட வெப்பம் உயரும்நிலையில் அது சமவெளியிலும் வெப்பத்தை அதிகப்படுத்துகிறது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்