Logo
Logo

முக்கிய செய்தி:

பொது

கொலை வழக்கு விசாரணைக்கு வந்த கைதி 2வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி - திண்டுக்கல் கோர்ட்டில் பரபரப்பு

SAMYUKTHA15-04-2024
கொலை வழக்கு விசாரணைக்கு வந்த கைதி 2வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி - திண்டுக்கல் கோர்ட்டில் பரபரப்பு

திண்டுக்கல் நீதிமன்றத்தில் மனைவியை கொன்ற வழக்கின் விசாரணைக்காக வந்த கைதி, 2வது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், பழநி பாப்பன்பட்டியை சேர்ந்தவர் திருமூர்த்தி (30). கூலித்தொழிலாளி. மனைவி மாலதி. 2 குழந்தைகள் உள்ளனர். திருமூர்த்தி கடந்த 2023ம் ஆண்டு மனைவி மாலதியை குடும்ப தகராறு காரணமாக கொலை செய்தார். இவ்வழக்கில் பழநி தாலுகா போலீசார், திருமூர்த்தியை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு விசாரணை திண்டுக்கல் மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடந்தது. இதையொட்டி, இன்று காலை இவ்வழக்கு தொடர்பான விசாரணைக்காக மதுரை மத்திய சிறையிலிருந்து திருமூர்த்தியை போலீசார் அழைத்து வந்தனர். இவ்வழக்கு நடக்கும் நீதிமன்றம் 2வது மாடியில் இருப்பதால் திருமூர்த்தி, போலீசாருடன் படிக்கட்டு வழியாக மேலே சென்று விசாரணைக்காக நீதிமன்ற வாசலில் காத்திருந்தனர். அப்போது திடீரென திருமூர்த்தி விசாரணைக்கு பயந்து அங்கிருந்த பாதுகாப்பு போலீசாரின் கையை தட்டிவிட்டு 2வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து போலீசார், படுகாயமடைந்த திருமூர்த்தியை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், திருமூர்த்தியின் இடுப்பு எலும்பு முறிந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசார் விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே கடந்த மார்ச் 19ம் தேதி இதேபோல் போக்சோ வழக்கில் தொடர்புடைய கைதி ஒருவர், திண்டுக்கல் நீதிமன்றத்தில் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்