Logo
Logo

முக்கிய செய்தி:

பொது

ஈரான் ஏவிய 80 டிரோன்கள் அழிப்பு - அமெரிக்க ராணுவம் தகவல்

SAMYUKTHA15-04-2024
ஈரான் ஏவிய 80 டிரோன்கள் அழிப்பு - அமெரிக்க ராணுவம் தகவல்

ஈரான் ஏவிய 300 டிரோன்களில் 80 டிரோன்களை இடைமறித்து அழித்ததாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. சிரியா தலைநகர் டமாஸ்கஸ்சில் உள்ள ஈரான் தூதரக கட்டிடத்தின் மீது இஸ்ரேல் விமானம் குண்டு வீசி தாக்கியதில் ஈரான் நாட்டின் ராணுவ தளபதி உட்பட 7 பேர் உயிரிழந்தனர். அதற்கு பழிவாங்கும் வகையில் நள்ளிரவில் ஈரான் 300க்கும் அதிகமான டிரோன்கள், ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கி வீசி தாக்குதல் நடத்தியது. அதில்,99 சதவீத டிரோன்கள், ஏவுகணைகள் இடைமறித்து அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்திருந்தது. இந்நிலையில், அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் விடுத்துள்ள அறிக்கையில், ஈரான் ஏவிய 80 டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் இஸ்ரேலில் உள்ள இலக்குகளை அடையும் முன்னர் அமெரிக்க ராணுவம் அவற்றை இடைமறித்து அழித்தது. ஹவுதி கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்தும் டிரோன்கள் ஏவப்பட்டன. அவையும் சுட்டு வீழ்த்தப்பட்டன. இதுவரை எப்போதும் நடந்திராத வகையில் ஈரான் நடத்தியுள்ள இந்த தாக்குதல் மத்திய கிழக்கு பகுதியின் நிலைத்தன்மை மற்றும் அமெரிக்க மற்றும் கூட்டு படைகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும்.மேலும் பிராந்தியத்தின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கு இதர நாடுகளுடன் சேர்ந்து பணியாற்றுவோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்