Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

ஜனநாயகத்தை காக்க குடும்ப ஆட்சியை அகற்ற வேண்டும்... பாரிவேந்தர் பிரசாரம் – கர்நாடகாவில் நடப்பது என்ன? வாக்காளர்கள் கேள்வி

SAMYUKTHA16-04-2024
ஜனநாயகத்தை காக்க குடும்ப ஆட்சியை அகற்ற வேண்டும்... பாரிவேந்தர் பிரசாரம் – கர்நாடகாவில் நடப்பது என்ன? வாக்காளர்கள் கேள்வி

பெரம்பலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாஜக கூட்டணி வேட்பாளரான ஐஜேக நிறுவனர் பாரிவேந்தர், ஜனநாயகத்தை காக்க குடும்ப ஆட்சி அகற்றப்பட வேண்டும் என பிரச்சாரம் செய்தார். அதற்கு பதிலடியாக, கர்நாடகாவில் நடப்பது என்ன மக்கள் ஆட்சியா? என வாக்காளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பெரம்பலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர், தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சூறவாளியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அப்போது அவர், தாமரை சின்னத்துக்கு வாக்கு சேகரித்து வருகிறார். இதையொடடி, லால்குடி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது. ஜனநாயகத்தை காக்க குடும்ப ஆட்சி அகற்றப்பட வேண்டும். 1200 ஏழை மாணவர்களுக்கு இலவச உயர் கல்வியும், 1500 ஏழை குடும்பங்களுக்கு இலவச உயர் சிகிச்சை வழங்கப்படும் பள்ளி விடை - பை பாஸ் சாலையில் சப்வே பாலம் கட்டி தரப்படும். தமிழ்நாட்டில் உள்ள 38 திமுக எம்பிகள் 75 சதவீதம் மத்திய அரசு வழங்கிய நிதியை செலவு செய்யாமல் மீண்டும் திருப்பி அனுப்பினர். ஆனால் மக்களவை உறுப்பினருக்கான நிதியை தொகுதி மக்களுக்கு, நான் முழுமையாக செலவு செய்துள்ளேன். காவிரி நீர் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். பிரச்சாரத்தின்போது, பாஜக வேட்பாளர் பாரிவேந்தர், ஜனநாயகத்தை காக்க குடும்ப ஆட்சி அகற்றப்பட வேண்டும் என பேசினார். ஆனால் பக்கத்து மாநிலமான கர்நாடகாவில், எடியூரப்பா நாடாளுமன்ற செய்குழு உறுப்பினர், அவரது மூத்த மகன் எம்எல்ஏ மற்றும் மாநில தலைவர், 2வது மகன் சிட்டிங் எம்எல்ஏ மற்றும் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இது குடும்ப அரசியலில் இல்லையா என வாக்காளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்