Logo
Logo

முக்கிய செய்தி:

தேர்தல் களம்

மக்களவை தேர்தல்: திமுகவின் பலம், பலவீனங்கள் - ஒரு பார்வை

VASUKI RAVICHANDHRAN16-04-2024
மக்களவை தேர்தல்: திமுகவின் பலம், பலவீனங்கள் - ஒரு பார்வை

மக்களவை தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், திமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் தேர்தல் களத்தில் அனல் பறக்கும் பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறம் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவை என 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

திமுகவின் கூட்டணியில் திமுக-21, காங்கிரஸ்- 10 சி.பி.எம் -2, சி.பி.ஐ-2, மதிமுக- 1, கொ.ம.தே.க-1, இ.யூ.மு.லீ-1, வி.சி.க- 2 ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே, திமுக தேர்தல் வேலைகளை முழுவீச்சில் ஆரம்பித்தது. கூட்டணியிலும் எந்த இடத்திலும், சறுக்காமல் கச்சிதமாக காய்நகர்த்தியது என்றே சொல்லலாம். அதே போல், திமுக ஆளும் கட்சியாக இருப்பதால், எளிதாக வென்று விடும் என்று பொதுமக்கள் மத்தியில் ஒரு பிம்பம் நிலவுகிறது. அதை உண்மையாக்கும் விதத்தில் அதிமுகவும் கூட்டணியை கட்டமைப்பதில் சறுக்கியது.

திமுக

  • திமுக கூட்டணி பலமான கூட்டணி என திரும்ப திரும்ப அனைவரையும் நம்ப வைப்பது

  • அதிமுகவை வீழ்த்த கூட்டணி பலமில்லை என்று திமுக தொடர்ந்து பிரச்சாரத்தில் முன் வைக்கிறது

  • பாஜக பெரிய அளவில் வெற்றி பெறும், அதிமுகவைவிட பல இடங்களில் கூடுதல் வாக்குகள் பெறும் என்கிற பிம்பம்

  • அதிமுக - பாஜக கள்ள உறவு என்கிற பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

  • திமுகவின் முறை கேடுகள், ஊழல், மக்களை பாதிக்கும் விவகாரங்களை பாஜக கூட்டணி பேசாதது

  • சின்னம் போனதால் சீமான் பிரச்சாரத்தில் தொய்வு, திமுகவுக்கு சாதகமாக மாறியுள்ளது.

திமுக ஆட்சிபலம், கூட்டணி பலம்

  • 3 ஆண்டு மோசமான ஆட்சி மக்கள் வெறுப்பு ஆனாலும், கூட்டணி பலமாக அமைந்துள்ளது.

  • அதிமுக கூட்டணி பலமின்றி நிற்பது திமுகவுக்கு சாதகம் உள்ளது

  • பாஜக பெறும்வாக்குகள், பெறும் என்பது அதிமுகவுக்கு பலவீனம்

  • வட மாவட்டங்களில் பாமக வாக்குகளை பிரிப்பது திமுகவுக்கு பலம்

  • சென்னையில் வடசென்னை, தென்சென்னை, இழுபறியாக இருந்தாலும் திமுக வெல்லவே வாய்ப்பு

  • தமிழிசை வாக்குகளை பிரிப்பதால் அதிமுகவுக்கு பாதகம்

  • ஊடகங்கள், சமூகவலைதளம் மூலம் திமுக வெல்லும் என திரும்ப திரும்ப பிரச்ச்சாரம்

  • உளவுத்துறை ரிப்போர்ட்டில் தென்சென்னை, வடசென்னை, மத்திய சென்னை ஆகிய 3 தொகுதிகளிலும் திமுக வெல்லும் என ரிப்போர்ட் என்று வெளியாகியுள்ளது. இதை பார்த்தால் பலமும், பலவீனமும் அதிகமாகவே உள்ளது

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்