Logo
Logo

முக்கிய செய்தி:

தேர்தல் களம்

ஹேமந்த் சோரன் வழக்கு; ராஞ்சியில் பல்வேறு இடங்களில் சோதனை, ஒருவர் கைது

PRIYA16-04-2024
ஹேமந்த் சோரன் வழக்கு; ராஞ்சியில் பல்வேறு இடங்களில் சோதனை, ஒருவர் கைது

ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் மீது அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள பணமோசடி விசாரணை தொடர்பாக இன்று தலைநகர் ராஞ்சியில் பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

ராஞ்சியில் அந்து திர்கே என்பருடன் தொடர்புடைய இடங்களில் இந்த சோதனை நடந்தது.

அமலாக்கத்துறை அப்சார் அலி என்பவரை கைது செய்துள்ளது. இவர் மற்றொரு சட்ட விரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் நீதிமன்றக் காவலில் சிறையில் உள்ளார். இவருக்கு, ஹேமந்த் சோரன் வழக்கோடு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் நீதிமன்ற அனுமதியோடு காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இவர் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியுடன் இணைந்து ஜார்கண்டில் நிலத்தை அபகரித்தாக குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது.

அப்சார் அலியோடு சேர்த்து இதுவரை இந்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஜார்கண்ட் முதல்வராக இருந்த சோரனை, பதவியை ராஜினாமா செய்த சில மணி நேரத்தில் அமலாக்கத்துறை கடந்த ஜனவரி மாதம் கைது செய்தது. தற்போது ராஞ்சியில் உள்ள ஹோட்வார்வின் பிர்சா முண்டா சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டு உள்ளார். ராஞ்சியில் பல கோடி மதிப்புடைய 8.86 ஏக்கர் நிலத்தை சோரன் சட்டத்துக்கு புறம்பாக வாங்கியதாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பானு பிரதாப் பிரசாத், முகமது சதாம் ஹுசைன் ஆகியோரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

ராஞ்சியில் உள்ள சிறப்பு சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்ட (பிஎம்எல்ஏ) நீதிமன்றத்தில் சோரன் உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை மார்ச் 30ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.

ஜார்கண்ட் போலீசில், அரசு அதிகாரிகள் உள்பட பலர் மீது நில ஊழல் நடந்ததாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ஊழலில் நடந்த சட்டவிரோத பணப்பரிவர்த்தனையை அமலாக்கத்துறை விசாரணை நடத்தத் தொடங்கியது.

இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியான பானு பிரதாப் பிரசாத், அரசு ஆவணங்களை பாதுகாவலராக இருந்தார். அவர் சோரன் உள்ளிட்ட பல்வேறு நபர்களுக்கு சட்டவிரோதமாக நிலத்தை பெற தனது பதவியை தவறாக பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.

இதற்கிடையே ஹேமந்த் சோரனின் ஜாமீன் மனு இன்று சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அமலாக்கத்துறை பதில் அளிக்க கால அவகாசம் கோரியதை அடுத்து, மனு மீதான விசாரணை ஏப்ரல் 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்