Logo
Logo

முக்கிய செய்தி:

தேர்தல் களம்

”பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை” – மத்திய அரசை கண்டித்த இ.பி.எஸ்

LENIN DEVARAJAN17-04-2024
”பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை” – மத்திய அரசை கண்டித்த இ.பி.எஸ்

”கச்சா எண்ணெயின் விலை குறைந்தபோதும் பெட்ரோல் டீசலின் விலையை குறைக்காமல், பொதுமக்கள் மீது வரியை சுமத்தியிருக்கிறார்கள். இதனால் மத்திய அரசை நான் வன்மையாக கண்டிக்கிறேன்”, என எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,

”தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் விலைவாசி உயர்வு, மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு என பல பிரச்சனைகளை மக்கள் சந்திக்கிறார்கள். 2019 மக்களவை தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவும் நிறைவேற்றவில்லை. தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தவறிய அரசாக திமுக அரசு உள்ளது. மேகதாது அணையை கட்டியே தீருவோம் என கர்நாடகத்தை ஆளும் காங்கிரஸும், ஆண்ட பாஜகவும் கூறி வருகின்றன.

2014-ம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தது. அப்போது டீசல் விலை ரூ.55. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த கச்ச எண்ணெயின் விலை ஒரு பேரல் 105 டாலர். தற்போதைய நிலவரப்படி பெட்ரோலின் விலை ரூ.102, டீசல் விலை ரூ.94. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யக்கூடிய ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 85 டாலர்.

2014-ம் ஆண்டு கச்ச எண்ணெயின் விலை அதிகரித்தபோது பெட்ரோல், டீசல் விலையும் குறைந்திருந்தது. ஆனால், தற்போது கச்சா எண்ணெயின் விலை குறைந்தபோதும் பெட்ரோல் டீசலின் விலையை குறைக்காமல், பொதுமக்கள் மீது வரியை சுமத்தியிருக்கிறார்கள். தற்போது கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது பெட்ரோல் டீசல் விலை அதிகரித்துள்ளது. இதனால் மத்திய அரசை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

2021 சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியின் போது திமுக அளித்த வாக்குறுதியில் பெட்ரோல், டீசல் விலை ரூ.4 குறைக்கப்படும் என உறுதியளித்தார்கள். அவர்களும் குறைக்கவில்லை. அண்டை மாநிலம் கர்நாடகா மற்றும் புதுச்சேரியில் பெட்ரோல் டீசல் விலையை குறைத்திருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாடு அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை. இதனால், அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது. பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்”, இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்