Logo
Logo

முக்கிய செய்தி:

சினிமா

Vikram Birthday: தமிழ் சினிமாவின் பிதாமகன் சியான் விக்ரம் பிறந்தநாள் ஸ்பெஷல்

NIRANJAN17-04-2024
Vikram Birthday: தமிழ் சினிமாவின் பிதாமகன் சியான் விக்ரம் பிறந்தநாள் ஸ்பெஷல்

ஆரம்ப காலத்தில் டப்பிங் கலைஞனாக இருந்து இன்று உச்ச நட்சத்திர நாயகனாக உயர்ந்திருப்பவர் சியான் விக்ரம்

'பொன்னியின் செல்வன்' படத்திற்குப் பின், விக்ரம் பா.இரஞ்சித்தின் இயக்கத்தில் 'தங்கலான்' படத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தை முடித்துக்கொடுத்துவிட்டு, அடுத்த படத்திற்கு தயாரானார். சென்ற ஆண்டில் வெற்றி பெற்ற பல படங்களின் அறிமுக இயக்குநர்கள் உட்பட பலரிடம் அவர் கதைகள் கேட்டுவந்தார். அதில் 'சித்தா' அருண்குமார் சொன்ன கதை பிடித்துவிட, உடனே முழுக்கதையையும் ரெடி பண்ணச் சொல்லிவிட்டார் விக்ரம். இதில் விக்ரமின் தோற்றம் பேசப்படும் என்கின்றனர்.

ரிஸ்க் எடுப்பதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுவது மாதிரி என்பது போல ஒவ்வொரு படத்திலும் தன் உடலை வருத்தி நடிப்பவர். தொலைக்காட்சி தொடரின் மூலம் கேமராவின் முன் நடிக்க தொடங்கியவர், அதைத்தொடர்ந்து சில படங்களில் நாயகனாக நடித்தார். ஆனால் அவை பெரிதளவு கவனம் பெறவில்லை. உறுமீன் வரும் வரை காத்திருந்த கொக்கு போல சரியான நேரத்தை எதிர்பார்த்து காத்திருந்த விக்ரமுக்கு 1999ல் பாலா இயக்கத்தில் வெளியான சேது திரைப்படம் மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்தது. அதைத்தொடர்ந்து தில்,தூள்,காசி, ஜெமினி, பிதாமகன் என தொட்டதெல்லாம் பிளாக்பஸ்டர் ஹிட் தான்.

ஒவ்வொரு படத்திற்கும் தன்னுடைய லுக்கை வேறுபடுத்தி காட்ட பல மணி நேரம் ஜிம்மில் செலவழித்து உடலை உருக்கி தன்னைத்தானே மாற்றிக் கொள்ளும் உன்னத கலைஞன் விக்ரம். நகைச்சுவை, ஆக்சன், சென்டிமென்ட் என களம் எதுவானாலும் ஆட்டநாயகனாக அடித்து நொறுக்கும் அசாத்திய நடிகன்.

விக்ரமுக்கு வயது ஏற ஏற அவருடைய நடிப்பு மெருகேறி கொண்டே போகிறது. அந்த அளவிற்கு இவருடைய தனித்துவமான நடிப்பு பலரையும் ஆச்சரியப்படுத்துகிறது. இவர் நடிப்பில் உருவாக்கியுள்ள துருவ நட்சத்திரம், தங்கலான் போன்ற திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. குறிப்பாக தங்கலான் திரைப்படத்தில் வேறொரு பரிமாணத்தில் நடித்துள்ளார். இந்த கெட்டப்பும் விக்ரமுக்கு நல்ல பெயரை பெற்று தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போது அருண்குமாரின் படத்தில் விக்ரமின் ஜோடியாக துஷாரா நடிக்கிறார். இந்தப் படத்தில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா கமிட் ஆகியிருக்கிறார். இதுபோக மலையாளத்தில் இருந்து சுராஜ் வெஞ்சாரமூடு கமிட் ஆகியிருக்கிறார். டெக்னீஷியன்கள் ஒவ்வொருவராக அறிவிக்கப்பட்டுவருகின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசை, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு என படப்பிடிப்புக்கு தயாராகி வருகின்றனர். படத்தின் டைட்டில் அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்குகிறது. 'சித்தா'வைப் போல இதுவும் த்ரில்லர் எனத் தகவல். விக்ரமை வைத்து 'இருமுகன்', 'சாமி ஸ்கொயர்' ஆகிய படங்களைத் தயாரித்த ஷிபு தமீன்ஸ், இதனைத் தயாரிக்கிறார். 'சியான் 62' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்