Logo
Logo

முக்கிய செய்தி:

தேர்தல் களம்

'Kovai Rising' என்ற பெயரில் கோவைக்கு தனி தேர்தல் அறிக்கை - கணபதி ராஜ்குமார் வெளியிட்டார்

LENIN DEVARAJAN17-04-2024
'Kovai Rising' என்ற பெயரில் கோவைக்கு தனி தேர்தல் அறிக்கை - கணபதி ராஜ்குமார் வெளியிட்டார்

KovaiRising’ என்ற பெயரில் கோவைக்கு தனி தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார்.

தமிழ்நாட்டில் கோவை மக்களவை தொகுதி ஸ்டார் தொகுதியாக பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதிமுக கூட்டணி என இருமுனை போட்டி நிலவியதை மட்டுமே பல ஆண்டுகளாக நாம் பார்த்திருப்போம். இம்முறை கோவையில் அதிமுக, திமுக கூட்டணியோடு பாஜக கூட்டணியும் போட்டாப்போட்டியில் ஈடுபட்டிருப்பதால் கோவை தொகுதி அரசியல் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது .

பிரதமர் மோடி முதல் மத்திய அமைச்சர்கள் வரை கோவைக்கு வருகை தந்து அண்ணாமலையை வெற்றிப்பெறச் செய்து, தமிழ்நாட்டில் பாஜகவை வளர்க்க வேண்டும் என உறுதியாக இருக்கிறார்கள்.

மறுபக்கம், கோவையில் அண்ணாமலை வெற்றிப்பெறுவார் என போலியான கருத்து கணிப்புகளை வெளியிட்டு மக்களை நம்ப வைக்க முயற்சிப்பதாக திமுக மற்றும் அதிமுகவினர் குற்றம் சாட்டுகிறார்கள்.

தமிழ்நாட்டில் பெரிதும் செல்வாக்கு இல்லாத கட்சியாக இருக்கும் பாஜக, கோவையில் வெற்றிப்பெறும் என அக்கட்சியினர் தொடர்ச்சியாக கூறுவதால் பொதுமக்களின் கவனம் கோவையை நோக்கி சென்றிருக்கிறது.

கடந்த வாரம் முதல்வர் ஸ்டாலின் மற்றும் ராகுல்காந்தி ஆகியோர் கோவையில் பரப்புரை மேற்கொண்டு ’இண்டி’ கூட்டணியின் மாஸை காட்டினார்கள்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதியிலும் அதிமுக அமோக வெற்றிப்பெற்றது. அதுமட்டுமின்றி கடந்த கால தேர்தல் முடிவுகளை பார்த்தால் கோவையில் அதிமுகவின் ஸ்ட்ரைக் ரேட் அதிகமாக இருக்கிறது.

இப்படி அதிமுக, திமுக மற்றும் பாஜக ஆகிய மூன்று கட்சிகளும் கோவையை கைப்பற்ற வேண்டும் என மும்முரம் காட்டுவதோடு மட்டுமல்லாமல், கோவை மக்களை கவரும் விதமாக தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி விசுகிறார்கள்.

இந்நிலையில்,’KovaiRising’ என்ற பெயரில் கோவைக்கு தனி தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார். அதில்,

  • தொழில்நுட்ப ஜவுளித் துறையில் உள்ள சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களின் (MSME) நவீனமயமாக்கல் மற்றும் திறன் மேம்பாட்டிற்கு அரசு மானியங்கள் மூலம் ஊக்குவிக்கப்படும்.

  • கோவை விமான நிலைய விரிவாக்க பணிகள் விரைந்து முடிக்கப்படும்

  • கோவை மாவட்டத்தில் பன்னோக்கு சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டப்படும்

  • கோவை மெட்ரோ ரயில் திட்டம் விரைந்து மேற்கொள்ளப்படும் முதல் கட்ட பணிகள் உரிய கால நேரத்திற்குள் தொடங்கி முடிவடையும்.

  • கோவையில் புதிய IISC., IIM., ஆகியவை தொடங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்

ஆகிய வாக்குறுதிகளை கணபதி ராஜ்குமார் அளித்திருக்கிறார்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்