Logo
Logo

முக்கிய செய்தி:

தேர்தல் களம்

ஆதார் அட்டை உட்பட 12 ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம் - தேர்தல் ஆணையம்

VASUKI RAVICHANDHRAN17-04-2024
ஆதார் அட்டை உட்பட 12 ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம் - தேர்தல் ஆணையம்

தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு 'பூத் சிலிப்' விநியோகிக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் பூத் சிலிப்பை அடையாள அட்டையாக பயன்படுத்த முடியாது எனவும், ஆதார் அட்டை உள்பட 12 ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வாக்காளர் அடையாள அங்கீகரிக்கப்பட்ட 12 அட்டை இல்லாதவர்கள் அடையாள அட்டைகளில் வாக்களிக்கலாம் என்று கூறியுள்ளது தேர்தல் ஆணையம் தேர்தல் ஆணையத்தால் ஒன்றைப் பயன்படுத்தி

தேர்தல் ஆணையம் சார்பில் 12 ஆவணங்களை அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது, அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

  1. வாக்காளர் அடையாள அட்டை

  2. ஆதார் அட்டை

  3. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் பணி அட்டை

  4. கணக்கு புத்தகங்கள் (வங்கி, அஞ்சலகங்களால் புகைப்படத்துடன் வழங்கப்பட்டவை)

  5. மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை (மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது)

  6. ஓட்டுநர் உரிமம்

  7. இயலாமைக்கான தனித்துவமான அட்டை (இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தல் வழங்கப்பட்டது)

  8. வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை

  9. ஸ்மார்ட் கார்டு (தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்டது)

  10. இந்திய கடவுச்சீட்டு

  11. ஓய்வூதிய ஆவணம் (புகைபடத்துடன் கூடியது)

  12. அடையாள அட்டை (மத்திய/மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்களின் தொழிலார்களுக்கு வழங்கப்பட்டது)

  13. அலுவலக அடையாள அட்டை (பாராளுமன்ற/சட்டமன்ற பேரவை/சட்டமன்ற மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது)

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்