என் அன்பு வாசகர்களே,
நக்கீரன் காமராஜின் தரப்பு என்ன என்பதை தெரிந்து கொள்வதற்காக, நேற்று காமராஜை சவுக்கு தொடர்பு கொண்டது. சார் சவுக்கு சார்பாக பேசுகிறோம். உங்கள் தரப்பு என்ன என்று கூறுங்கள், பதிப்பிக்கிறோம் என்று கேட்டாம். அதற்கு காமராஜ், உங்கள் கேள்விகளை அனுப்பி வையுங்கள் என்று கூறினார். அய்யா, உங்கள் ஈமெயில் ஐடியை கொடுங்கள் என்று கேட்டதற்கு, எனக்கு அதெல்லாம் தெரியாது, உங்கள் கேள்விகளை அனுப்பி வையுங்கள், பதில் கூறுகிறேன் என்று கூறினார்.
சவுக்கு அவருக்கு கேள்விகளை அனுப்புவதை விட, வாசகர்களாகிய நீங்கள் கேட்பதுதானே பொருத்தமாக இருக்கும். என் அன்பு வாசகர்களே, நக்கீரன் காமராஜ் அவர்களிடம், நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை பின்னூட்டங்களாக போடுங்கள். அந்தக் கேள்விகள் தொகுக்கப் பட்டு, காமராஜ் அவர்களுக்கு அனுப்பி வைக்கப் படும். அவரின் பதிலும் தவறாமல் பிரசுரிக்கப் படும்.
தயவு செய்து, நீங்கள் சவுக்கு வாசகர்கள் என்பதை மனதில் வையுங்கள். சவுக்கின் நன்னெறியை காப்பதில், சவுக்கை விட, உங்களுக்குத் தான் அதிக பொறுப்பு. கேள்விகள் நாகரீகமாகவும் பண்பாகவும் இருக்க வேண்டும் என்பது, வேண்டுகோள் அல்ல. உரிமையுடன் இடப்படும் அன்புக் கட்டளை.
அன்புடன்
சவுக்கு