Logo
Logo

முக்கிய செய்தி:

சவுக்கு ஸ்பெஷல்

சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் எதிர்ப்பையும் மீறி அடர்வனப்பகுதி சுரங்கம் அதானி குழுமத்துக்கு ஒதுக்கீடு

SAVUKKU BUREAU29-03-2024
சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் எதிர்ப்பையும் மீறி அடர்வனப்பகுதி சுரங்கம் அதானி குழுமத்துக்கு ஒதுக்கீடு

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் எதிர்ப்பையும் மீறி, தனியார் மின்உற்பத்தி நிறுவனங்கள் கூட்டமைப்பின் லாபியால், மத்தியப் பிரதேசத்தின் அடர்ந்த வனப்பகுதிக்குள் இருக்கும் நிலக்கரி சுரங்கம் அதானி குழுமத்துக்கு ஒதுக்கப்பட்டது.

எதிர்ப்பு, மீறல்

மத்தியப்பிரதேசத்தில் அடர் வனப்பகுதியில் இருக்கும் மாரா 2 மகான் நிலக்கரி சுரங்கத்தை(Mara II Mahan coal block ) ஏலம் விட்டால் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பு இருக்காது என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மத்திய நிலக்கரி அமைச்சகத்துக்கு அறிவுறுத்தியது.

அது மட்டுமல்லாமல், நிலக்கரி அமைச்சகத்தின் சொந்த நிபுணர் குழுவும் சுரங்கத்தை ஒதுக்கீடு செய்தால், சுற்றுச்சூழல் சிக்கல் வரும் என எச்சரித்தது. இருப்பினும், தனியார் மின்உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லாபியால் அந்தச் சுரங்கம் ஏலத்துக்கு திறக்கப்பட்டது.

நிலக்கரி பற்றாக்குறை

இதுகுறித்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் , தி கலெட்டிவ் ரிப்போர்ட் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. நாட்டில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்படப்போகிறது, மின் உற்பத்தி நிறுவனங்களிடம் குறைந்த அளவே நிலக்கரி இருப்பு இருக்கிறது என்று கடந்த 2021ம் ஆண்டு மின் உற்பத்தி நிறுவனங்கள் கூட்டமைப்பு நிலக்கரி அமைச்சகத்திடம் தவறான தகவலை கொண்டு சேர்த்தது.

forest.jpg

ஆனால், மின்உற்பத்தியாளர்களின் லாபி, அந்த லாபி குழுவில் இருக்கும் அதானி குழுமத்துக்குத்தான் முழுமையாக பலன் அளிக்கும் என்று ஏற்கெனவே தி கெலக்டிவ் செய்தி வெளியிட்டிருந்தது

வெறும் 6 % மட்டும்

2021, மார்ச் 12ம் தேதி, அதானி குழுத்தின் நிறுவனமான மஹான் எனர்ஜென் லிமிடட், மத்தியப்பிரேதத்தின் வனப்பகுதியில் உள்ள மாரா 2 மகான் நிலக்கரி(Mara II Mahan) சுரங்கத்தின் ஒப்பந்தத்தைப் பெற்றது. இந்த சுரங்கத்தின் உற்பத்திதிறன் 99.50 கோடி டன் நிலக்கரியாகும். நிலக்கரி ஒதுக்கீடு பெற்ற அதானி குழுமம், தனது வருவாயில் வெறும் 6 சதவீதத்தை மட்டும் அரசுக்கு வழங்குவதாகத் தெரிவித்தது.

இது தொடர்பாக அதானி குழுமத்தின் செய்தித்தொடர்பாளுக்கு மின்அஞ்சல் மூலம் கேள்விகள் அனுப்பி தி ரிப்போர்டர்ஸ் கலெக்டிவ் சார்பில் பதில் பெறப்பட்டது.

அதானி குழுமம் பதில்

அதில் அதானி குழுமத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில் “மின் உற்பத்தியாளர் கூட்டமைப்பில் உள்ள (APP) உறுப்பினர்களின் பங்கு குற்ற உங்கள் விளக்கம் மற்றும் கேள்விகல் ஆதாரமற்றவை, பொருத்தமற்றவையாக இருக்கிறது. மின் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பில் 25 உறுப்பினர்கள் இருக்கிறோம். நிலக்கரி சுரங்கத்தை ஒதுக்கீடு செய்யும் முடிவில் மின் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்புக்கு எந்தவிதமான பங்கும் இல்லை.

ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்கு ஆதரவாக நிலக்கரி சுரங்கத்தை ஒதுக்கீடு செய்ய மின் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு அழுத்தம் கொடுத்தது என்று கூறுவது முழுமையாக ஆதாரமில்லாத குற்றச்சாட்டு” எனத் தெரிவித்துள்ளார்.

இரு புதிய நிலக்கரி சுரங்கங்களை விரைவில் திறக்கக் கோரி மத்திய நிலக்கரி துறை அமைச்சகத்துக்கு மின் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பான லாபி குழு கடிதம் எழுதியிருந்தது. அந்த ஆவணங்களை தி ரிப்போர்டர்ஸ் கலெக்டிவ் சேகரித்து, அதை லாபி குழுவிடம் அளித்தது. coal.jpeg

மின்அஞ்சல்

மத்திய மின்சக்தி துறையின் முன்னாள் அதிகாரி மற்றும் மின் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் இயக்குநரான அசோக் குராணா, கடந்த 2021ம் ஆண்டு மத்திய நிலக்கரித்துறை செயலருக்கு மின்அஞ்சல் அனுப்பியுள்ளார்.

அந்த மின்அஞ்சலில் மின்உற்பத்தியாளர்கள் விரைவில் நிலக்கரி பற்றாக்குறையைச் சந்திக்கப் போகிறார்கள் என்று தெரிவித்து, ஆதலால் புதிய நிலக்கரி சுரங்கங்கள் அவசியம். தற்போது இருப்பில் உள்ள நிலக்கரி 4 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும். இந்த தேசத்தில் நிலக்கரி மின்உற்பத்திக்கு பற்றாக்குறை ஏற்படும் என்று தெரிவித்திருந்தார்.

அந்த மின்அஞ்சலில் குராணா இரு நிலக்கரி சுரங்கங்களின் பெயரைக் குறிப்பிட்டருந்தார். ஒன்று மத்தியப்பிரதேசத்தில் உள்ள சிங்கராவுளியில் மரா 2 மஹான் நிலக்கரி சுரங்கம், 2வது சத்தீஸ்கரில் உள்ள ஹாஸ்டியோ அரந்த் நிலக்கரி சுரங்கம். ஆனால், உண்மை நிலவரம் என்னவென்றால், உள்நாட்டில் நிலக்கரி போதுமான அளவு இருந்தது, பற்றாக்குறை இல்லை. 2021, டிசம்பரில் நாடாளுமன்றத்தில் இதை மத்திய நிலக்கரி துறை அமைச்சகமே தெரிவித்துள்ளது.

coal.png

ஆனால் கடும் மழை மற்றும் ரயில்வே தடங்கள் பற்றாக்குறையால் நிலக்கரியை கொண்டு செல்வதில்தான் சிக்கல் இருக்கிறது, அதை மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு கொண்டு செல்வதில் கடும் பிரச்சினை இருக்கிறது எனத் தெரிவித்தது. இதையடுத்து,இரு சுரங்கங்களையும் திறக்க மத்திய நிலக்கரி துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

adanii.jpg

சுற்றுச்சூழல் அமைச்சகம் பரிந்துரை

2018ம் ஆண்டு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அளித்த பரிந்துரையில், 15 நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விட மத்திய நிலக்கரி துறை திட்டமிட்டுள்ளது.

இதில் மத்தியப்பிரதேசத்தில் உள்ள சிங்கராவுளியில் மரா 2 மஹான் நிலக்கரி சுரங்கம், 2வது சத்தீஸ்கரில் உள்ள ஹாஸ்டியோ அரந்த் நிலக்கரி சுரங்கம்ஆகியவற்றுக்கு மட்டும் விலக்கு அளிக்கவேண்டும். ஏனென்றால் இந்த இரு சுரங்கங்களும் அதிக பல்உயிர் பகுதிகள் வாழும் இடத்தில் இருக்கிறது, இது பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருக்கிறது என்று தெரிவித்தது.

இதையடுத்து, மத்திய நிலக்கரித்துறை அமைச்சகம், மத்திய சுரங்கத் திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு நிறுவனத்துக்கு அளித்த உத்தரவில், “15 நிலக்கரி சுரங்கங்களிலும் நிலக்கரி எடுக்கும்போது, வனப்பகுதியை எந்தவிதமான தொந்தரவும், பாதிப்பும் ஏற்படுத்தாமல் செய்ய வேண்டும் என்று தெரிவித்தது. இந்த மத்திய சுரங்கத் திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு நிறுவனம் என்பது மத்திய நிலக்கரி அமைச்சகத்துக்கு கட்டப்பட்டது, அனைத்து வளங்கள் மற்றும் நிலக்கரி சுரங்கங்கள் குறித்த ஆலோசனைகளை அமைச்சகத்துக்கு இந்த நிறுவனமே வழங்குகிறது. அடர் வனப்பகுதியில் வேண்டாம்

மத்திய சுரங்கத் திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு நிறுவனம், அதன் பரிந்துரையில் “ 15 நிலக்கரி சுரங்கங்கள் அதிக அடர்ந்த வனப்பகுதியால் சூழப்பட்ட இடத்தில் இருப்தால், அவற்றில் எதையும் சுரங்கம் திறக்கவோ நிலக்கரி எடுக்கவோ அனுமதிக்க முடியாது என்று நிலக்கரி அமைச்சகத்திடம் தெரிவித்தது.

ஆனால், மத்திய நிலக்கரி துறை அமைச்சகம், தனது சொந்த ஆய்வுநிறுவனம் அளித்த அறிவுரையையும் மீறி செயல்பட்டது. தனத சொந்த ஆய்வுநிறுவனம் அளித்த முக்கியப் பரிந்துரைகள், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அறிவுரைகளையும் மத்திய நிலக்கரித்துறை அமைச்சகம் நிராகரித்தது.

coal.jpg

அதானி குழுமம்

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தடை செய்ய பரிந்துரை செய்திருந்த 15 நிலக்கரி சுரங்கங்களையும் நிலக்கரி துறை அமைச்சகம் சுரங்கப்பணிகளுக்காக திறந்துவிட்டுள்ளது. இதில் 4 சுரங்கங்கள் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ளது, அந்த 4 சுரங்கங்களும் மின் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் லாபியால் அதானி குழுமத்துக்கு கிடைத்தது.

சமீபத்தில் இந்த நிலக்கரி சுரங்கத்துக்கான ஏலம் நடந்தது. இந்த ஏலத்தில் அதானி குழுமம் மட்டுமே விருப்பமனு தெரிவித்திருந்ததால், அந்த ஏலம் ரத்து செய்யப்பட்டது.

2வது கட்டமாக ஏலம் நடந்தபோது, திரிவேணி எர்த்மூவர்ஸ் பிரைவேட் லிமிட் மற்றும் அதானி குழுமத்தின் மகான் எனர்ஜென் லிமிடெட் பங்கேற்றன. இதில் அதானி குழுமம், 300 கோடி டன் நிலக்கரியை வைத்திருக்கும் 9 சுரங்கங்களை ஏலத்தில் கைப்பற்றியது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்