Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

பொதுமக்கள் வாயை பிளக்க வைத்த நவாஸ் கனியின் சொத்து மதிப்பு...5 ஆண்டுகளில் மூன்று மடங்கு உயர்வு

LENIN DEVARAJAN29-03-2024
பொதுமக்கள் வாயை பிளக்க வைத்த நவாஸ் கனியின் சொத்து மதிப்பு...5 ஆண்டுகளில் மூன்று மடங்கு உயர்வு

ராமநாதபுரம் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் நவாஸ் கனியின் சொத்து மதிப்பு கடந்த மூன்று ஆண்டுகளில் 5 மடங்கு அதிகரித்திருப்பது பொதுமக்கள் மத்தியில் பேசுபொருளாகியிருக்கிறது. மேலும், அவர் கடந்த 5 ஆண்டுகளில் தனது சொத்தை வளர்ப்பதற்காக முக்கியத்துவம் கொடுத்து, தொகுதி பக்கமே எட்டிப்பார்க்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.

ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் திமுகவின் கூட்டணி கட்சியான இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி போட்டியிடுகிறார். தற்போதைய சீட்டிங் எம்.பி-யான நவாஸ் கனியின் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

கடந்த மக்களவை தேர்தலின் போது, நவாஸ் கனி தாக்கல் செய்த வேட்புமனுவில் ரூ.36 கோடியே 46 லட்சமாக இருந்த சொத்து மதிப்பு, தற்போது 102 கோடியாக உயர்ந்திருப்பது பொதுமக்களிடையே வாயை பிளக்கவைத்துள்ளது.

எம்.பி.நவாஸ் கனியிடம் கையில் ரூ.12,56,987 ரொக்கமாக இருப்பதாகவும், அவரது மனைவி ஹம்சத் பர்வீனிடம் ரூ1,89,450 ரொக்கமாக கையில் இருப்பதாக வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், நவாஸ் கனியிடம் 1,646 கிராம் தங்கம், இருப்பதாகவும், தனது மனைவியிடம் 1,510 கிராம் தங்கம் இருப்பதாகவும் அவரது மகன்களிடம் 1,446 கிராம் தங்கம் என மொத்தம் 575.25 பவுன் நகைகள் இருப்பதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்.

நவாஸ் கனியிடம் ரூ.8,60,83,451 மதிப்பிலான அசையும் சொத்துகள் இருப்பதாகவும், அவரது மனையிடம் ரூ.1,48,28,915 மதிப்பிலான அசையும் சொத்துகள் இருப்பதாகவும், அவரது மகன்கள் பெயரில் ரூ.1,27,85,000 மதிப்பிலான அசையும் சொத்துகள் இருப்பதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்.

நவாஸ் கனியிடம் ரூ.20,78,77,047 மதிப்பிலான அசையா சொத்துகள் இருப்பதாகவும், அவரது மனைவி ஹம்சீத் பர்வீன் பெயரில் ரூ.1,35,78,885 மதிப்பிலான அசையா சொத்துகள் இருப்பதாகவும், அவரது மகனுக்கு ரூ.33,88,000 மதிப்பிலான அசையா சொத்துகள் இருப்பதாக வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.

நவாஸ் கனிக்கு ரூ.85,11,98,086 மதிப்பிலும், அவரது மனைவி ஹம்சீத் பர்வீனிடம் ரூ.15,19,87,864 மதிப்பிலும், மகன்களுக்கு ரூ. 2,00,50,000 என மொத்தம் ரூபாய் 102 கோடியே 54 லட்சத்து 2,450 மதிப்பில் தனக்கு சொத்து உள்ளதாக நவாஸ் கனி தாக்கல் செய்த வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற பிறகு நவாஸ் கனி தொகுதி பக்கமே எட்டிப்பார்க்கவில்லை என்ற தொகுதி மக்கள் விமர்சிக்கிறார்கள். தொகுதி மக்களின் அதிருப்தியை சந்தித்துள்ள நவாஸ் கனிக்கு ஐ.யு.எம்.எல் கட்சி மீண்டும் சீட் வழங்கியிருக்கிறது.

கடந்த 5 ஆண்டுகளில் தனது சொத்தை வளர்ப்பதற்காக உழைத்த நவாஸ் கனி, மக்களுக்காக எதுவும் உழைக்கவில்லை என எதிர்க்கட்சியினர் விமர்சிக்கிறார்கள்.

மறுபக்கம் ராமநாதபுரத்தை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என அதிமுக தீவிரமாக களப்பணிகளை மேற்கொண்டுள்ளது. அதேபோல், பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுயேச்சையாக களமிறங்கியுள்ளார்.

அவருக்கு போட்டியாக 5 பன்னீர்செல்வன்கள் களமிறங்கியுள்ளார்களா? அல்லது களமிறக்கப்பட்டார்களா? என சமூக வலைதளங்களில் கேள்வி எழுகிறது.

இதனால், ராமநாதபுரம் மக்களவை தேர்தல் களம் கோடை வெயிலை மிஞ்சும் அளவுக்கு சூட்டை கிளப்பியுள்ளது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்