Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

சமூக நீதி, இயற்கை நீதியை இந்தியாவிற்கே வழிகாட்டும் முதல் மாநிலம் தமிழகம் தான் - செல்வப்பெருந்தகை

ESWAR29-03-2024
சமூக நீதி, இயற்கை நீதியை இந்தியாவிற்கே வழிகாட்டும் முதல் மாநிலம் தமிழகம் தான் - செல்வப்பெருந்தகை

மத்தியில் உள்ள பாசிச ஆட்சியை அகற்ற தமிழகத்தில் இருந்து தான் தீப்பொறி புறப்படுகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்

சென்னை தேனாம்பேட்டை அண்ணா சாலையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் கோபண்ணா எழுதிய பாசிசம் வீழட்டும் இந்தியா மீளட்டும் என்ற தேர்தல் பிரச்சார நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டு நூலை வெளியிட்டார், இந்நூலை முதல் பிரதியாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பெற்று கொண்டார். அதனைத் தொடர்ந்து காமராஜர் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள காமராஜரின் வாழ்க்கை வரலாறு புகைப்பட கண்காட்சியை செல்வப்பெருந்தகை திறந்து வைத்தார்.

இவ்விழாவில் உரையாற்றிய ஆர் எஸ் பாரதி, மக்களவை தேர்தலில் பாஜக மோடி ஆட்சி வெற்றி பெறாது என்றும் மக்கள் தெளிவாகி விட்டனர். தமிழ்நாட்டில் 40 தொகுதியிலும் வெற்றி பெற்று இந்தியா முழுவது வெற்றி பெற்று இந்தியா கூட்டணி ஆட்சியமைப்பது உறுதி என பேசினார்.

பின்னர் உரையாற்றிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, பிரதமர் மோடியின் மக்களுக்கு எதிரான அநீதிகள், ஊழல்கள், தேர்தல் பத்திர முறைகேடுகள் பற்றிய முழு விவரம் இந்த நூலில் இடம் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளது. இந்தியா கூட்டணி மிகப்பெரிய திருப்பத்தை தமிழ்நாட்டிற்கு ஏற்படுத்தும் என்றும் 40 தொகுதிகளிலும் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். சமூக நீதி, இயற்கை நீதியை இந்தியாவிற்கே வழிகாட்டும் முதல் மாநிலம் தமிழகம் தான். மத்தியில் உள்ள பாசிச ஆட்சியை அகற்ற தமிழகத்தில் இருந்து தான் தீப்பொறி புறப்படுகிறது. இந்தியாவில் மக்களுக்கு எதிராக அநீதி ஏற்பட்டால் முதல் குரல் தமிழ்நாட்டிலிருந்துதான் எழும். பாசிச பாகக ஆட்சியை வீழ்த்துவதற்கான தீப்பொறியும் தமிழ்நாட்டிலிருந்துதான் தொடங்கியுள்ளது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்