Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

சர்வதேச அளவில் எதிரொலிக்கும் "கெஜ்ரிவால் கைது"; ஜெர்மனி, அமெரிக்காவைத் தொடர்ந்து ஐ.நா.வும் கருத்து

CHENDUR PANDIAN.K29-03-2024
சர்வதேச அளவில் எதிரொலிக்கும் "கெஜ்ரிவால் கைது"; ஜெர்மனி, அமெரிக்காவைத் தொடர்ந்து ஐ.நா.வும் கருத்து

டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட விவகாரம் சர்வதேச அளவில் எதிரொலித்து வருகிறது.‌ ஜெர்மனி மற்றும் அமெரிக்காவைத் தொடர்ந்து தற்போது ஐநா சபையும் இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்து உள்ளது.

"தேர்தல் நடைபெறும் எந்தவொரு நாட்டையும் போலவே இந்தியாவிலும் அனைவரது உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும்" என்று விரும்புவதாக, ஐ.நா. தெரிவித்துள்ளது.

டெல்லி மதுபான ஊழல் வழக்கில் தேர்தல் அறிவிப்புக்கு பின் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான கெஜ்ரிவால் மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

கைதுக்குப் பின் தற்போது அமலாக்கப் பிரிவு அதிகாரிகளின் காவலில் இருந்த போதிலும் கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவி ராஜினாமா செய்யவில்லை. காவலில் இருந்தபடியே அரசாங்க உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.

அவருடைய கைதுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் 31ஆம் தேதி அன்று பிரமாண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் கெஜ்ரிவால் கைது பிரச்சனை உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வழக்கு நியாயமான முறையில் நடைபெற வேண்டும் என்று முதலில் ஜெர்மனி கருத்து தெரிவித்திருந்தது.

பின்னர் அமெரிக்காவும் இந்த பிரச்சனையை தொடர்ந்து கவனித்து வருவதாகவும், நியாயமான வெளிப்படை தன்மை உடன் கூடிய உரிய நேரத்தில் சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என இரண்டு முறை கருத்து தெரிவித்திருந்தது. இதற்கு இந்தியா தனது கடும் கண்டனத்தை பதிவு செய்திருந்தது.

இந்த நிலையில் ஐநா சபையும் தற்போது இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ளது.

செய்தியாளர் சந்திப்பில் கெஜ்ரிவால் கைது, காங்கிரஸ் வங்கி கணக்குகள் முடக்கம் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் பதில் அளித்தார்.

அப்போது அவர், “தேர்தல் நடைபெறும் எந்தவொரு நாட்டையும் போலவே இந்தியாவிலும் அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் உட்பட அனைவரின் உரிமைகளும் பாதுகாக்கப்பட்டு சுதந்திரமான மற்றும் நியாயமான சூழ்நிலையில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்று அவர் கூறினார்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்