Logo
Logo

முக்கிய செய்தி:

பொது

ஜெயிலில் கற்ற தொழில் – வெளியே வந்து கள்ள நோட்டு அச்சடித்த முன்னாள் கைதி

PRIYA28-03-2024
ஜெயிலில் கற்ற தொழில் – வெளியே வந்து கள்ள நோட்டு அச்சடித்த முன்னாள் கைதி

சிறையில் பல்வேறு குற்றங்களுக்காக தண்டனை பெற்று காலத்தைக் கழிக்கும் சிறைவாசிகள், சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் வேலை செய்து வாழ உதவும் வகையில் சிறையில் கைத் தொழில்கள் கற்றுத் தரப்படுகின்றன.

தையல், உணவுப் பொருள் தயாரிப்பு, தச்சு வேலை, ஆப் செட் பிரிண்டிங், ஸ்கீரின் பிரிண்டிங் போன்ற பல தொழில்கள் கற்றுத் தரப்படுகின்றன. மேலும் படிப்பதற்கும் சிறையில் வசதிகள் செய்து தரப்படுகின்றன.

இந்நிலையில் சிறையில் அளிக்கப்படும் இந்த பிரிண்டிங் தொழிலை கற்றுக் கொண்ட சிறைவாசி ஒருவர், வெளியே வந்து எளிதில் பணம் சம்பாதிக்க முடிவு செய்து, ரூபாய் நோட்டையே அச்சடித்த சம்பவம் நடந்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் தான் இந்த சிறைவாசி தனது திறமையைக் காட்டி உள்ளார். 35 வயதான பூபேந்திர சிங் தாகத், ஒரு கொலை வழக்கு உள்பட 11 குற்ற வழக்குகளில் தொடர்புடையவர். இவர் ஒரு வழக்கில் விதிஷா மாவட்டத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டு காலத்தைக் கழித்துள்ளார். அப்போது, அவருக்கு ஆப் செட் பிரிண்டிங் மற்றும் ஸ்கீரின் பிரிண்டிங் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.

வெளியே வந்த அவர் கடந்த சில மாதங்களாக அம்மாவட்டத்தில் தங்கி கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை அன்று அவரை போலீசார் கைது செய்த போது தான் இந்த விவரங்கள் வெளிவந்துள்ளன. கைது செய்யப்பட்ட போது 95 எண்ணிக்கையில் ரூ. 200 கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அவரது வீட்டில் இருந்தது கலர் பிரிண்டர், 6 மை பாட்டில்கள், ரூபாய் நோட்டுக்கான தாள் தயாரிக்கப் பயன்படும் பேப்பர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்