Logo
Logo

முக்கிய செய்தி:

தேர்தல் களம்

அண்ணாமலையை வச்சி செய்த ஜோதிமணி…கோவையில் போட்டியிட்டாலும் தோல்வி உறுதி என விமர்சனம்

LENIN DEVARAJAN28-03-2024
அண்ணாமலையை வச்சி செய்த ஜோதிமணி…கோவையில் போட்டியிட்டாலும் தோல்வி உறுதி என விமர்சனம்

கரூரில் போட்டியிட்டால் தோல்வி உறுதி என்பதை தெரிந்ததால் தான் அண்ணாமலை கோவையில் போட்டியிடுவதாக ஜோதிமணி விமர்சித்துள்ளார். கோவையில் போட்டியிட்டாளும் அண்ணாமலை வெற்றிபொற மாட்டார் என ஜோதிமணி பேசியிருப்பது பாஜகவினரை ஆத்திரமடைய செய்துள்ளது.

கரூர் தொகுதியை சேர்ந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டியிடுவதை எம்.பி.யும், கரூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான ஜோதிமணி கடுமையாக விமர்சித்துள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை, தற்போது கோவையில் போட்டியிட வேண்டிய அவசியம் என்ன? என எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்புகிறார்கள். தமிழ்நாட்டு மக்களுக்கு பாஜக நல்லது செய்திருந்தால் அண்ணாமலை சொந்த தொகுதியை விட்டு கோவைக்கு ஓட வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்விகளை எதிர்கட்சியினர் எழுப்புகிறார்கள்.

கரூரில் போட்டியிட்டால் தோல்வி உறுதி என்பதை அறிந்ததால் தான் அண்ணாமலை கோவைக்கு செல்வதாக ஜோதிமணி காட்டமாக விமர்சித்தார். மேலும், தேர்தல் வரும் போது தான் பிரதமர் தமிழகம் வருவதாகவும், வெள்ளம் வந்த போதும் தமிழகத்திற்கு நிவாரணம் வழங்கவில்லை என பிரதமர் மோடியை ஜோதிமணி கடுமையாக சாடியிருப்பது பாஜகவினரை சூடேற்றியுள்ளது.

மேலும், பிரதமர் மோடி 100 தடவை தமிழ்நாடு வந்தாலும், பாஜக வெற்றிபெற வாய்ப்பே இல்லை என ஜோதிமணி பேசியிருப்பதை காங்கிரஸார் சமூகவலைதளங்களில் அதிகளவில் ஷேர் செய்கிறார்கள். அப்பதிவுக்கு பாஜகவினர் எதிர்கருத்து தெரிவிப்பதால் பாஜகவினர் மற்றும் காங்கிரஸார் இடையே கமெண்ட் செக்‌ஷனில் கருத்து மோதல்கள் நிலவுகிறது.அதுமட்டுமின்றி, பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் கொலை வெறியில் இருப்பதாக ஜோதிமணி கடுமையாக விமர்சித்திருப்பது பாஜகவினரை மேலும் ஆத்திரம் அடைய செய்துள்ளது.

தமிழகத்தில் 4 முனை போட்டி நிலவினாலும், காங்கிரஸ்-பாஜக நேரடியாக போட்டியிடும் தொகுதிகள் அரசியல் முக்கியத்தும் பெற்றுள்ளது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்