Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

இந்தியாவை அலங்கோலமாக்க மோடி முயற்சி - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

VASUKI RAVICHANDHRAN28-03-2024
இந்தியாவை அலங்கோலமாக்க மோடி முயற்சி - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் அறிமுக கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் நடந்தது. இதில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமை வகித்தார். முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது:

தமிழகத்தில் இந்தியா கூட்டணி வலுவான கூட்டணியாக உள்ளது. இந்தியாவில் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இந்தியாவின் எதிர்காலத்தை தலைகீழாக மாற்றி அமைக்க மோடி வேண்டி வருகிறார். ஒரே நாடு, ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம், குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்களை நிறைவேற்றி இந்தியாவை அலங்கோலமாக மாற்றவும், ஆர்எஸ்எஸ் இந்துத்துவா நாட்டை உருவாக்கவும் மோடி முயற்சித்து வருகிறார். மூன்றாவது முறையாக மோடி ஆட்சிக்கு வந்தால் அடுத்த 5 ஆண்டுக்கு பின்னர் இந்தியாவில் தேர்தல் நடக்காது. இதுவே கடைசி தேர்தலாக இருக்கும். ராகுல் காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மட்டுமே மோடியை எதிர்த்து வருகின்றனர். டெல்லியில் முதலமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் இரண்டு முதலமைச்சர்கள், அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இது ஜனநாயக படுகொலையாகும். தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார். ஆனால் ஒன்றியத்தில் பத்தாண்டு ஆட்சி செய்த மோடி எந்த வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை. இவ்வாறு சிதம்பரம் பேசினார்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்