Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் ₹55 கோடி பொருட்கள் பறிமுதல் - மாநில தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

SAMYUKTHA28-03-2024
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் ₹55 கோடி பொருட்கள் பறிமுதல் - மாநில தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

மக்களவை தேர்தல் தேதி அறிகவிக்கப்பட்ட நாள் முதல் மாநிலத்தில் ரொக்க பணம், இலவச பரிசுகள், தங்கம், வெள்ளி, வைர நகைகள், மதுபானங்கள் உட்பட இதுவரை ரூ.55.76 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்துள்ளதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். நாட்டின் 18வது மக்களவை தேர்தல் தேதி கடந்த 16ம் தேதி வெளியிடப்பட்டது. அன்று முதல் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. தேர்தலில் முறைகேடுகள் நடக்காமல் தவிர்க்க போலீஸ், வருமான வரித்துறை மற்றும் பறக்கும் படைகள் அமைத்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். பெங்களூரு உள்ளிட்ட மாநகரங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைத்து கண்காணித்து வருகிறார்கள். தேர்தல் விதிமுறை அமலுக்கு வந்த 12 நாட்களில் நடத்திய சோதனையில் ₹19.69 கோடி ரொக்க பணம், ₹3.7 கோடி மதிப்பிலான பரிசு பொருட்கள், ₹26.20 கோடி மதிப்பிலான மதுபானங்கள், ₹88 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள், ₹5.47 கோடி மதிப்பிலான தங்க ஆபரணங்கள், ₹26 லட்சம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள், ₹9 லட்சம் மதிப்பிலான வைர ஆபரணங்கள் உள்பட ₹55.76 கோடி மதிப்பிலான ரொக்க பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 847 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 92,664 துப்பாக்கிகள் அதன் உரிமையாளர்களிடம் இருந்து பெற்று போலீஸ் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ளது. போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்காமல் வைத்திருந்த 875 துப்பாக்கிகளை பறிமுதல் செய்துள்ளதுடன் 15 துப்பாக்கிகளின் அனுமதி உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. துப்பாக்கி உரிமம் தவறாக பயன்படுத்தியதாக 706 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய போதை பொருள் தடுப்பு சட்டத்தில் 44 வழக்குகள், கலால்துறை 3,013 வழக்குகள் பதிவு செய்துள்ளதுடன் 492 வாகனங்கள் பறிமுதல் செய்யதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்