Logo
Logo

முக்கிய செய்தி:

தேர்தல் களம்

தேர்தலுக்கு பிறகு எங்கே பாஜ? என போஸ்டர் ஒட்டக்கூடிய நிலை வரும் - கொந்தளித்த ஈவிகேஎஸ். இளங்கோவன்

SAMYUKTHA28-03-2024
தேர்தலுக்கு பிறகு எங்கே பாஜ? என போஸ்டர் ஒட்டக்கூடிய நிலை வரும் - கொந்தளித்த ஈவிகேஎஸ். இளங்கோவன்

கோபியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் திருப்பூர் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் சுப்பராயனை அறிமுகப்படுத்திய முன்னாள் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது:

மோடியை வீட்டிற்கு அனுப்பினால்தான் நாடு உருப்படியாகும் என்பதை மக்கள் அறிந்து இருக்கிறார்கள். மக்கள் வாக்கின் மூலமாக அதை செயல்படுத்தி காண்பிக்க இருக்கின்றனர்.

தமிழகத்திற்கு பிரதமர் அதிக முறை வருவதற்கு காரணம் அவருக்கு வேறு போக்கிடம் கிடையாது. அதனால் தான் தமிழகம் வருகிறார். இப்போது இரவிலும் தமிழகத்தில் தங்க ஆரம்பித்து உள்ளார். எதற்கு தங்குகிறார்? யாருக்காக தங்குகிறார் என்பதை விரைவில் வெளியிடுவோம்.

சுப்பிரமணியசாமி கூட, மோடி தோற்கடிக்கப்படுவார் என்று கூறுகிறார். வட இந்தியாவில் அவருக்கு மிகப்பெரிய ஆதரவு என்று சொல்வது மாயைதான். தேர்தல் பிரசாரத்திற்காக ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி தமிழகம் வர உள்ளனர். பாஜ தனித்து நின்று தனியாகவே ஒழிந்து விடுவர். பாஜ கூட்டணியை சாதாரணமாக நினைத்துவிடக்கூடாது. மக்கள் செல்வாக்கு பெற்றுள்ள வாசன், ஜான்பாண்டியன், டி.டி.வி.தினகரன், அதிமுக சார்பில் 40 தொகுதிகளில் ஒரே தொகுதியில் மட்டும் போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வம் எப்படியாவது டெபாசிட்டையாவது பெற்று விட வேண்டும் என்று நினைத்து போட்டியிடுகிறார்.

தேர்தலுக்கு பிறகு எங்கே பாஜ என்று போஸ்டர் ஒட்டக் கூடிய நிலை வந்துவிடும். மூட்டை முடிச்சுகளோடு ஓடிவிடுவர். அதிமுகவை பொறுத்த வரை, எம்.ஜி.ஆர் தொடங்கிய இயக்கத்தை இப்படி பாழ்படுத்திவிட்டார்களே என்ற வருத்தம் உள்ளது. தமிழகத்தில் உருவான ஒரு கட்சி தேர்தலுக்கு பிறகு காணாமல் போய்விடுகிறதே என்பதை நினைக்கையில் வருத்தமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்