Logo
Logo

முக்கிய செய்தி:

பொது

பெங்களூரு குண்டுவெடிப்பு: தமிழகத்தில் நடத்திய சோதனையில் என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

ESWAR28-03-2024
பெங்களூரு குண்டுவெடிப்பு: தமிழகத்தில் நடத்திய சோதனையில் என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழகத்தில் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட மூன்றுக்கும் மேற்பட்ட செல்போன்கள் மற்றும் ஆவணங்களை பூந்தமல்லி என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு முகமை அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது . குறிப்பாக வெடிகுண்டு கொண்டு வந்த நபர் தமிழகத்தில் தங்கிச் சென்றிருப்பது தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, சென்னை முத்தியால்பேட்டை, ராயப்பேட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் என தமிழக முழுவதும் ஐந்து இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் மூன்றுக்கும் மேற்பட்ட செல்போன்கள் மற்றும் முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் நாளை பெங்களூரில் உள்ள தேசிய புலனாய்வு முகமை அலுவலகத்தில் ஆஜராகுமாறு அபுதாகிர் என்பவருக்கு சம்மன் கொடுத்து சென்றனர்.

இந்த நிலையில் சந்தேகப்படும் நபரின் வீடுகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள் மற்றும் முக்கிய ஆவணங்களை என்.ஐ.ஏ அதிகாரிகள் பூந்தமல்லி என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். அடுத்த கட்டமாக இந்த நபர்கள் யாருடன் தொடர்பில் இருந்துள்ளனர் இவர்கள் மேற்கொண்டுள்ள பண பரிவர்த்தனை தொடர்பாக விவரங்களை சேகரிக்க செல்போன்களை சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக தேசிய புலனாய்வு முகமை அமைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்