Logo
Logo

முக்கிய செய்தி:

பொழுதுபோக்கு

காவாலா பாடலுககு ஜப்பான் தூதர் அட்டகாச நடனம் - வைரலாக பரவும் வீடியோ

MARY RAJAKUMARI17-08-2023
காவாலா பாடலுககு ஜப்பான் தூதர் அட்டகாச நடனம் - வைரலாக பரவும் வீடியோ

கடந்த வாரம் நடிகர் ரஜினி நடிப்பில், உலகம் முழுவதும் ரிலீசான ஜெயிலர் படத்தின் காவாலா பாடலுக்கு ஜப்பான் தூதர் அட்டகாச நடனமாடி, சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் கடந்த 10ம் தேதி ரிலீசானது. முன்னதாக அப்படத்தில் உள்ள காவாலா பாடல் பட்டி தொட்டி முழுவதும் பரவி, ரசிகர்களை கும்மாளம் போட வைத்தது. தொடர்ந்து அடுத்தடுத்து வந்த பாடல்களும், ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டன. ஆனால், காவாலா பாடலுக்கான வரவேற்பு அந்த அளவுக்கு இல்லை. அதே நேரத்தில் படம் ரிலீசாகி ஒரு வாரம் ஆன பிறகும், இன்னும் வசூலில் குவித்து கொண்டு வருகிறது.இதனால் படக்குழுவினர் ஆனந்தம் அடைந்துள்ளனர். உலகம் முழுவதும் 7,000 தியேட்டர்களிலும், தமிழகத்தில் 1,200 திரைகளிலும் இப்படம் வெளியான இப்படம், இதுவரை உலகளவில் ரூ.300 கோடி வசூலை கடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், ஜெயிலர் படடத்தில் இடம்பெற்று உலகளவில் பிரபலமடைந்த காவாலா பாடலுக்கு பலரும் நடனமாடி விடியோவை வெளியிட்டு வருகின்றனர். பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவிகள், மூதாட்டிகள் என பலரும் டிக்டாக் வீடியோ பதிவு செய்து, அதனை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், ரஜினி நடித்த முத்து திரைப்படம், 1995ம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இந்திய திரையுலகின் சூப்பர்ஸ்டாராக வலம் வரும் ரஜினிக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக ஜப்பானில் ரஜினிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இதற்கு காரணம் அவர் நடிப்பில் வெளியான முத்து திரைப்படம், ஜப்பானில் ரிலீசாகி அங்கு வசூலையும் வாரிக்குவித்தது. அந்த சமயத்திலேயே ரூ.23.5 கோடி வசூலித்து இருந்தது.

இந்நிலையில், இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் ஹிரோஷி சுஸுகி, ‘ரஜிகாந்த்தின் மீதான என் அன்பு எப்போதும் தொடரும்’ என காவாலா பாடலுக்கு நடனமாடிய விடியோவைப் பகிர்ந்துள்ளார். தற்போது, இது வைரலாகி வருகிறது. இதை பார்த்து அனைத்து தரப்பினரும், பாராட்டி வருகின்றனர்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்