Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

மக்களவைத் தேர்தல்: இரு கட்டத் தேர்தலில் வெறும் 8% பெண் வேட்பாளர்களே போட்டி

PRITHIVIRAJ28-04-2024
மக்களவைத் தேர்தல்:  இரு கட்டத் தேர்தலில் வெறும் 8% பெண் வேட்பாளர்களே போட்டி

2024 நாடாளுமன்றத் தேர்தலில் நடந்து முடிந்த இரு கட்டத் தேர்தலில் வெறும் 8 சதவீத பெண் வேட்பாளர்களே போட்டியிட்டுள்ளது தெரியவந்துள்ளது.

அதாவது இரு கட்டத் தேர்தலில் சேர்த்து மொத்தம் 1,618 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் 8 சதவீதம் அதாவது 235 பெண் வேட்பாளர்களே போட்டியிட்டுள்ளனர். சமூகத்தில் பாலினப் பாகுபாடு ஆழமாக இன்னும் இருப்பது தெரியவருகிறது எனசமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.

முதல் கட்ட மக்களவைத் தேர்தலில் மொத்தம் 135 பெண் வேட்பாளர்களும், 2வது கட்டத் தேர்தலில் 100 வேட்பாளர்களும் போட்டியிட்டுள்ளனர்.

voter list.avif

முதல் கட்டத் தேர்தலில் போட்டியிட்ட 135 பெண் வேட்பாளர்களில் தமிழகத்தில் இருந்து மட்டும் 76 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர் இருப்பினும் தமிழகத்தின் வேட்பாளர்கள் சதவீதத்தில் இது வெறும் 8 சதவீதம்தான். 2வது கட்டத் தேர்தலில் கேரளாவில் 24 சதவீதம் பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.

கட்சிவாரியாகப் பார்த்தால் காங்கிரஸ் கட்சியில் இதுவரை 44 பெண் வேட்பாளர்களும், பாஜகவில் 69 பெண் வேட்பாளர்களும்கடந்த இரு கட்டத் தேர்தலில் போட்டியிட்டுள்ளனர்.

பெண் சக்தி பற்றி பேசும் பாஜக, பெண்களுக்கு33 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக இருக்கும் காங்கிரஸ் கட்சியும் அதை முழுமையாகச் செயல்படுத்தவில்லை. ஒடிசாவில் ஆளும் பிஜூ ஜனதா தளம் கட்சிதான் தேர்தலில் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தியுள்ளது.

voting-in-Chhattisgarh

டெல்லியில் உள்ள ஜூசஸ் அன்ட் மேரி கல்லூரி பேராசிரியர் டாக்டர் சுசிலா ராமசாமி கூறுகையில் “ அரசியல் கட்சிகள் இன்னும் ஆக்கத்துடன் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும்,

தேர்தலில் பெண் வேட்பாளர்களை அதிகம் களமிறக்க வேண்டும். கட்சிக்குள்ளேயே 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த முயற்சிக்க வேண்டும். பிரிட்டன் தொழிலாளர் கட்சி பெண்களுக்கான இடஒதுக்கீட்டுக்கு கட்சிக்குள்ளே முதலில் முக்கியத்துவம் அளித்தது

ஒட்டுமொத்த மக்கள் தொகையில் பாதிக்கும் மேல் பெண் வாக்காளர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கான பிரதிநிதித்துவம், வேட்பாளர்கள் ஒதுக்கீடு மோசமாக இருக்கிறது. அரசியலில் பெண்கள் முழுமையாக பங்கேற்க இருக்கும் தடைகளை உடைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

voting-660_111816115211.avif

மக்களவைத் தேர்தலில் இதுவரை 2 கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில் இன்னும் 5 கட்டங்கள் நடைபெற உள்ளன. மே 7ம் தேதி 3ம் கட்டத் தேர்தலும் 13ம் தேதி 4வது கட்டம், 20ம் தேதி 5வது கட்டம், 25ம் தேதி 6வது கட்டத் தேர்தலும் ஜூன் 1ம் தேதி இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்