Logo
Logo

முக்கிய செய்தி:

பொழுதுபோக்கு

சுற்றுச்சூழல் விதி விலக்கு கோரி பட்டாசு ஆலைகள் ஸ்டிரைக் - 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழப்பு

SAMYUKTHA19-02-2024
சுற்றுச்சூழல் விதி விலக்கு கோரி பட்டாசு ஆலைகள் ஸ்டிரைக் - 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழப்பு

சுற்றுச்சூழல் விதியில் இருந்து பட்டாசு தொழிலுக்கு விலக்கு கோரி, வெம்பக்கோட்டை பகுதியில் 100க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால், 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளன. இதன்மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். இந்நிலையில், பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதால் அதிக நச்சுப்புகை, சத்தத்தை வெளியிடும் பட்டாசுகள் தயாரிப்புக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. சரவெடி தயாரித்தல் மற்றும் பச்சை உப்பு வெடிமருந்துக்கு கட்டுப்பாட்டு அதிகாரிகள் தடை விதித்தனர். இதனால், 50 சதவீத பட்டாசு ஆலைகள் முழுமையாக இயங்க முடியவில்லை. இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளில் சோதனை என்ற பெயரில் அதிகாரிகள் கெடுபிடி செய்வதாக ஆலை உரிமையாளர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக பட்டாசு தொழில் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர். இந்நிலையில், சுற்றுச்சூழல் விதியில் இருந்து பட்டாசு தொழிலுக்கு விலக்கு அளிக்கக் கோரியும், சரவெடி, பேரியம் நைட்ரேட் மீதான தடையை நீக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழன் பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதன்படி, வெம்பக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இன்று காலை முதல் மூடப்பட்டன. இதனால், வெம்பக்கோட்டை, ஏழாயிரம்பண்ணை சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்