Logo
Logo

முக்கிய செய்தி:

சினிமா

'இளையராஜா' பயோபிக் படம் குறித்த புதிய தகவல் வெளியானது!

AISHWARYA ARUMUGAM29-03-2024
'இளையராஜா' பயோபிக்  படம் குறித்த புதிய தகவல் வெளியானது!

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ள இளையராஜாவின் பயோபிக் படத்தின் பூஜை மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் விழா இசமீபத்தில் சென்னையில் உள்ள லீலா பேலஸ்சில் நடைபெற்றது. அதில் கமல்ஹாசன், பாரதிராஜா, இளையராஜா, தனுஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். நடிகர் கமல் ஹாசன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார். நடிகர் ரஜினிகாந்த் காவேரி மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற நிலையில், இந்த விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை. இந்நிலையில் படம் குறித்த புதிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இசைஞானி என்று கொண்டாடப்படுபவர் இளையராஜா. பண்ணையபுரத்தில் இருந்து தன்னுடைய ஹார்மோனிய பெட்டியின் துணையுடன் சென்னை வந்த இளையராஜா இசைஞானியாக உருமாறியது மிகப்பெரிய வரலாறு. இனிமையான தனிமைக்கும் இளையராஜா இசையே கை கொடுக்கும். அந்த வகையில் கடந்த 1976ம் ஆண்டில் அன்னக்கிளி படத்தில் துவங்கிய பயணத்தை 1500 படங்களை தாண்டி இசையமைத்து வருகிறார் இசைஞானி.

நடிகர் தனுஷ் தீவிர இளையராஜா ரசிகர் என்பதை பல முறை பல மேடைகளில் கூறியிருக்கிறார். இளையராஜா சென்னையில் நடத்திய இசை நிகழ்ச்சிக்கும் முதல் ஆளாக தனது இரு மகன்களை அழைத்துக் கொண்டு சென்றார். தனுஷ் பாடும் போது கூட இளையராஜா பாடுவதை போல பாட வேண்டும் என அவர் முயற்சி செய்வது தெளிவாகத் தெரியும். இந்நிலையில், இளையராஜாவாகவே தனுஷ் நடிக்க உள்ளார். அந்த படத்தை கேப்டன் மில்லர் படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்க உள்ளார்.

இந்தச் சூழலில் படம் குறித்த புதிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதன்படி படத்தை இரண்டு பாகங்களாக உருவாக்க திட்டமிட்டிருக்கிறார்களாம். மேலும் வைரமுத்து கேரக்டரில் விஷாலும், ஏ.ஆர்.ரஹ்மான் கேரக்டரில் சிம்புவும் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது இந்நிலையில் இந்தப் படத்துக்காக தனுஷ் வாங்கவிருக்கும் சம்பளம் குறித்து பேச்சு ஒன்று கேட்கிறது. தனுஷ் இந்தப் படத்தின் ஒவ்வொரு பாகத்துக்காகவும் 50 கோடி ரூபாய் சம்பளம் வாங்கவிருக்கிறாராம். இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் அப்போ இளையராஜா பயோபிக்கிற்காக 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறாரா என ஆச்சரியப்பட்டிருக்கின்றனர்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்