Logo
Logo

முக்கிய செய்தி:

சினிமா

நச்சுன்னு 4 அப்டேட் பார்த்திருவோமா!

AISHWARYA ARUMUGAM29-03-2024
நச்சுன்னு 4 அப்டேட் பார்த்திருவோமா!

பா. ரஞ்சித் பாலிவுட் படத்தை இயக்குகிறாரா. அல்லு அர்ஜுனின் தீவிர ரசிகையா? இவர். 'இளையராஜா' பயோபிக் வெளியான புதிய தகவல்.

பா. ரஞ்சித்:

பா. ரஞ்சித் பாலிவுட்டில் படம் ஒன்றை இயக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனத்துடன் பா ரஞ்சித் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், கூடிய விரைவில், பட வேலைகள் துவங்க இருப்பதாகவும் அந்த படத்தில் நடிகர் ரன்வீர் சிங் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலை கேள்விப்பட்ட நெட்டிசன்ஸ் எல்லாரும் பாலிவுட்ஸ் போய்ட்டா எப்படி என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

அல்லு அர்ஜுன்:

அல்லு அர்ஜுன் தீவிர ரசிகையான சச்சின் டெண்டுல்கர் மகள் சாரா டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்திய சினிமாவின் பெருமை அல்லு அர்ஜுன் சாருக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டு அந்த மெழுகு சிலை புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும், புஷ்பா 2 ஹாஷ்டேக்கையும் அவர் பதிவிட்டுள்ளார். சோசியல் மீடியா க்ரஷ்: சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய கிரஷ் ஆக மாறியுள்ளார். இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களுக்கு ஏகப்பட்ட லைக்குகள் குவிந்து வருகின்றன. அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை புகைப்படத்தை ஷேர் செய்து அவர் வெளியிட்ட போஸ்டுக்கு கீழ் ஏகப்பட்ட ரசிகர்கள், அல்லு அர்ஜுன் உடன் இணைந்து ஒரு படம் நடியுங்கள் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

'இளையராஜா' பயோபிக்:

இந்தச் சூழலில் படம் குறித்த புதிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதன்படி படத்தை இரண்டு பாகங்களாக உருவாக்க திட்டமிட்டிருக்கிறார்களாம். மேலும் வைரமுத்து கேரக்டரில் விஷாலும், ஏ.ஆர்.ரஹ்மான் கேரக்டரில் சிம்புவும் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது இந்நிலையில் இந்தப் படத்துக்காக தனுஷ் வாங்கவிருக்கும் சம்பளம் குறித்து பேச்சு ஒன்று கேட்கிறது. தனுஷ் இந்தப் படத்தின் ஒவ்வொரு பாகத்துக்காகவும் 50 கோடி ரூபாய் சம்பளம் வாங்கவிருக்கிறாராம். இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் அப்போ இளையராஜா பயோபிக்கிற்காக 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறாரா என ஆச்சரியப்பட்டிருக்கின்றனர்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்