Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

"தேர்தல் வியூகம்" பற்றி, கெஜ்ரிவால் போனில் இருந்து அறிந்து கொள்ள விரும்புகிறது; பா.ஜ.க. மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

CHENDUR PANDIAN.K29-03-2024
"தேர்தல் வியூகம்" பற்றி, கெஜ்ரிவால் போனில் இருந்து அறிந்து கொள்ள விரும்புகிறது; பா.ஜ.க. மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் வியூகம் பற்றி கெஜ்ரிவால் ஃபோனில் இருந்து அறிந்து கொள்ள பாஜக விரும்புவதாக டெல்லி அமைச்சர் அதிஷி குற்றம் சாட்டி இருக்கிறார்.

உண்மையாகவே கெஜ்ரிவாலின் தொலைபேசியில் என்ன இருக்கிறது என்பதை அறிய விரும்புவது பாஜக தான், அமலாக்கத்துறை அல்ல என்றும் அவர் சாடினார்.

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் டெல்லி கல்வித்துறை அமைச்சருமான அதிஷி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

"அமலாக்கத் துறை, பாஜகவின் அரசியல் ஆயுதமாக செயல்பட்டு வருகிறது. முதல்வர் கெஜ்ரிவாலின் ஃபோனிலிருந்து ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வியூகம் பற்றி தெரிந்து கொள்ள பாஜக விரும்புகிறது.

ரோஸ் அவினியூ நீதிமன்றத்தில் வாதாடிய அமலாக்கத்துறை வழக்குரைஞர் ராஜு, முதல்வர் கெஜ்ரிவாலை மேலும் சில நாட்கள் தங்கள் காவலில் வைக்க விரும்புவதாக கூறியிருக்கிறார்.

ஏனென்றால் கெஜ்ரிவால் தனது மொபைல் போனின் பாஸ்வேர்டு எண்ணை கொடுக்க மறுத்து விட்டார். இது அமலாக்கத்துறை தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூறும்போது டெல்லி மதுபான கொள்கையை அமல்படுத்திய போது (2021) கெஜ்ரிவால் பயன் படுத்திய போனை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறி இருந்தது.

கெஜ்ரிவால் தற்போது பயன்படுத்தி வரும் போனை அமலாக்கத்துறை ஏன் பரிசோதிக்க விரும்புகிறது? அதில் இருந்து அவர்கள் என்ன தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள்? என்று கேட்க விரும்புகிறேன்.

நாடாளுமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பயன்படுத்த இருக்கும் வியூகங்களை அவர்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். இந்தியா கூட்டணி தலைவர்கள் இடையே பரிமாறப்பட்ட உரையாடல் விவரங்களையும் முழுமையான பிரச்சாரத் திட்டத்தையும் அந்த போன் மூலம் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள்.

ஆனால் அமலாக்கத்துறை மூலம் அந்த விவரங்களை பாஜக அறிந்து கொள்வது தான் இதன் உண்மையான நோக்கமாகும்".

இவ்வாறு அவர் கூறினார்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்