Logo
Logo

முக்கிய செய்தி:

சினிமா

ஆடு ஜீவிதம் படம் ஆஸ்கர் படம் அளவுக்கு வந்திருக்க வேண்டிய படம் - ப்ளூ சட்டை மாறன்

AISHWARYA ARUMUGAM29-03-2024
ஆடு ஜீவிதம் படம் ஆஸ்கர் படம் அளவுக்கு வந்திருக்க வேண்டிய படம் - ப்ளூ சட்டை மாறன்

மலையாள இலக்கிய உலகில் மிகவும் பிரபலமான மற்றும் விற்பனையில் சாதனைப் படைத்த நாவலான ‘ஆடுஜீவிதம்’ கதையை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திரைப்படம் உருவாகியுள்ளது. புகழ்பெற்ற எழுத்தாளர் பென்யாமின் எழுதிய இந்த நாவல் வெளிநாட்டு மொழிகள் உட்பட 12 வெவ்வேறு மொழிகளில், மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. தொண்ணூறுகளின் முற்பகுதியில் கேரளாவின் பசுமையான கடற்கரையிலிருந்து வெளிநாட்டில் அதிர்ஷ்டத்தைத் தேடி இடம்பெயர்ந்த இளைஞன் நஜீப்பின் வாழ்க்கையின் உண்மைக் கதையைதான் இந்த நாவல் விளக்குகிறது. இப்படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் கூறியதாவது.

ஆடு ஜீவிதம்: தேசிய விருது பெற்ற இயக்குநர் பிளெஸி இயக்கத்தில் விஷுவல் ரொமான்ஸ் தயாரித்துள்ள ’தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்’ படத்தில், ஹாலிவுட் நடிகர் ஜிம்மி ஜீன் லூயிஸ், இந்திய நடிகர்களான அமலா பால் மற்றும் கே.ஆர். கோகுல், பிரபல அரபு நடிகர்களான தலிப் அல் பலுஷி மற்றும் ரிக் அபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வரவிருக்கும் படத்தின் இசை இயக்கம் மற்றும் ஒலி வடிவமைப்பை அகாடமி விருது வென்ற ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ரசூல் பூக்குட்டி ஆகியோர் செய்துள்ளனர். படத்தின் பிரமிக்க வைக்கும் காட்சிகளை சுனில் கே.எஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ. ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்துள்ளார். உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் படமாக்கப்பட்ட இப்படம் மலையாளத் திரையுலகில் இதுவரை இல்லாத மிகப்பெரிய முயற்சியாகும். இதன் தயாரிப்பு தரம், கதைசொல்லல் மற்றும் நடிப்புத் திறன் ஆகியவற்றில் புதிய வரையறைகளை அமைத்துள்ளது. இந்நிலையில் இப்படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் கூறியதாவது.

ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: ஆடு ஜீவிதம் படத்திற்காக பிருத்விராஜ் கடுமையாக நடித்துள்ளார். மிகைப்படுத்தப்படாத நடிப்பை அவர் வெளிப்படுத்தியிருப்பது பாராட்டுதலுக்குரியது. பாலை வனம் என்றால் சிஜியில் எடுக்காமல், ராஜஸ்தானில் வைத்து மேட்ச் செய்து வெறுப்பேற்றாமல் சவுதி அரேபியாவில் எடுக்க அனுமதி கிடைக்கவில்லை என்றாலும், ஜார்டான் போன்ற இடங்களில் உண்மையான இடத்திற்கே படக்குழு சென்று தத்ரூபமாக இப்படியொரு படத்தைக் கொடுத்திருப்பது சூப்பரான விஷயம் என பாசிட்டிவ் சைடு பற்றி பேசியுள்ளார்.

ஆடு ஜீவிதம் படம் ஆஸ்கர் படம் அளவுக்கு வந்திருக்க வேண்டிய படம். ஆனால், இந்த படத்தை நான் லீனியராக சொல்லாமல் லீனியராக எடுத்திருந்தால் படம் சூப்பராக இருந்திருக்கும் என்று தனது கருத்தைக் கூறியுள்ளார்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்