Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

தேர்தலில் போட்டியிட 6 ஆண்டு தடை கோரி மோடிக்கு எதிரான வழக்கு - 29ம் தேதிக்கு ஒத்திவைப்பு... டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

SAMYUKTHA27-04-2024
தேர்தலில் போட்டியிட 6 ஆண்டு தடை கோரி மோடிக்கு எதிரான வழக்கு - 29ம் தேதிக்கு ஒத்திவைப்பு... டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

உத்தரபிரதேசத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி மத ரீதியாக பிரசாரம் செய்த பிரதமர் மோடிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை வருகிற 29ம் தேதிக்கு ஒத்திவைத்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கான 2வது கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தேர்தல் பிரசாரத்தின்போது, தேர்தல் விதிகளை மீறி சாதி, மதம் குறித்து பேசி வன்முறையை தூண்டும் வகையில் பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் பாஜ தேசிய தலைவர் ஜேபி. நாட்டா உள்ளிட்ட பாஜ தலைவர்கள் தொடர்ந்து பேசி வருன்றனர். இந்தநிலையில் தேர்தல் விதிமுறைகளை மீறி மத ரீதியாக பிரதமர் மோடி பிரசாரம் செய்து வாக்கு சேகரித்ததாக வழக்கறிஞர் ஆனந்த் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில், ‘உத்தரபிரதேச மாநிலம் பிலிபித்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கடவுள் மற்றும் வழிபாட்டு தலங்களை குறிப்பிட்டு அவர் பிரசாரம் செய்தார். தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி மத ரீதியாக வாக்கு சேகரித்த பிரதமர் மோடியை 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்,’என்று கூறியிருந்தார். இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சச்சின் தத்தா முன்பு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தது. இந்தநிலையில் மோடிக்கு எதிரான இந்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த வழக்கின் விசாரணை வருகிற 29ம் தேதிக்கு (திங்கட்கிழமை) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்