Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

ஹெலிகாப்டருக்குள் தவறி விழுந்த மம்தா பானர்ஜி; லேசான காயத்துடன் பிரசாரத்தை தொடர்ந்தார்

CHENDUR PANDIAN.K27-04-2024
ஹெலிகாப்டருக்குள் தவறி விழுந்த மம்தா பானர்ஜி; லேசான காயத்துடன் பிரசாரத்தை தொடர்ந்தார்

கொல்கத்தா

ஹெலிகாப்டருக்குள் ஏறி, இருக்கையில் அமர முயன்ற போது மம்தா பானர்ஜி நிலை தடுமாறி விழுந்து விட்டார். லேசான காயத்துடன் உதவியாளர்கள் அவரை மீட்டதும், அவர் தனது பிரசாரத்தை தொடர்ந்தார்.

மேற்கு வங்காள முதல் அமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி மாநில உலகம் சூறாவளி சொத்து பயணம் செய்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இன்று அவர் துர்காபூரில் இருந்து அசன்சாலுக்கு பிரசாரத்திற்கு புறப்பட்டார்.

தயாராக நின்று கொண்டிருந்த ஹெலிகாப்டருக்குள் படிக்கட்டு வழியாக ஏறிச்சென்ற அவர் இருக்கை ஒன்றில் அமர முயன்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டார்.

உடனடியாக அவருடைய பாதுகாவலர்கள் மம்தா பானர்ஜியை மீட்டு, முதல் உதவி சிகிச்சை அளித்தனர். அதன்பின் தேர்தல் பிரச்சாரத்திற்காக அன்சாலுக்கு அதே ஹெலிகாப்டரில் அவர் புறப்பட்டு சென்றார்.

கடந்த மாதம் மம்தா பானர்ஜி அவருடைய வீட்டிற்குள் நடந்து சென்ற போதும் தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். அப்போது அவருடைய தலை கண்ணாடி ஷோகேஸ் மீது இடித்து விட்டதால் நெற்றியில படுகாயம் அடைந்தார்.

ஏற்கனவே கடந்த ஜனவரி மாதத்தில் கிழக்கு பர்தான் மாவட்டத்தில் அவர் சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது கார் விபத்தில் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். மம்தா பானர்ஜியின் வாகன அணி வகுப்பு வரிசை சென்றபோது, 200 கிலோமீட்டர் வேகத்தில் வேகமாக வந்த கார் ஒன்று குறுக்கிட்டது.

உடனே சமயோசிதமாக செயல்பட்ட கார் டிரைவர், அதிரடியாக 'பிரேக்' போட்டு காரை நிறுத்தினார். இருப்பினும் மம்தாபானர்ஜியின் தலை "டேஷ் போர்டி"ல் இடுத்துக்கொண்டது. இந்த விபத்திலும் லேசான காயத்துடன் அவர் உயிர் தப்பினார்.

25 ஆயிரம் ஆசிரியர் பணி பறிப்பு

மேற்கு வங்கத்தில் ஆசிரியா் தோ்வில் முறைகேடு நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற 25,753 ஆசிரியா், அலுவலா் பணி நியமனங்களை ரத்து செய்து கொல்கத்தா உயா்நீதிமன்றம் சமீபத்தில் தீா்ப்பளித்தது. மக்களவைத் தோ்தல் நேரத்தில் வந்த இந்தத் தீா்ப்பு மேற்கு வங்கத்தில் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தோ்தல் பிரசாரத்தில் இந்த விவகாரம் எதிரொலித்து வருகிறது.

இந்நிலையில், மேற்கு வங்கத்தின் பிங்லா பகுதியில் தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட மம்தா இந்த விவகாரம் பற்றி குறிப்பிட்டார்.

ஆல் கொல்லி புலி பாஜக

"ஆள்கொல்லி புலிகளைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீா்கள். ஆனால், மக்களின் வேலைவாய்ப்பைக் கொன்று உண்ணும் கட்சியைப் பற்றி கேள்விப்பட்டுள்ளீா்களா? அதுதான் பாஜக.

இந்த விஷயத்தில் நீதிமன்றம் குறித்தோ, நீதிபதிகள் குறித்தோ விமா்சிக்க விரும்பவில்லை. இந்த வழக்கின் பின்னணியில் பாஜகவின் சதி உள்ளது. கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகளும் இதில் கை கோர்த்துள்ளன.

அவா்கள்தான் 25,753 ஆசிரியா்கள் பணி நியமனத்துக்கு எதிராக பொதுநல மனு தாக்கல் செய்து பணிகளைப் பறித்துள்ளனா். இதற்கு முக்கிய காரணமான பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்.

புதிதாக 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திரிணாமுல் காங்கிரஸ் அரசின் திட்டத்துக்கு எதிராகவும் பாஜக செயல்பட்டு வருகிறது. மேற்கு வங்க இளைஞா்கள் வேலையில்லாமல் கண்ணீா் வடிக்க வேண்டும் என்பதும், மேற்கு வங்க அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி தோ்தலில் வெல்ல வேண்டும் என்பதும்தான் அவா்கள் நோக்கமாக உள்ளது" என்று குற்றம் சாட்டினார்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்