Logo
Logo

முக்கிய செய்தி:

பொது

ராகுல் தொகுதியில், 72.69 சதவீத வாக்கு பதிவு; மாவோயிஸ்ட் எச்சரிக்கையை மீறி, துணிச்சலுடன் வாக்களித்த தமிழர்கள்

CHENDUR PANDIAN.K27-04-2024
ராகுல் தொகுதியில், 72.69 சதவீத வாக்கு பதிவு; மாவோயிஸ்ட் எச்சரிக்கையை மீறி, துணிச்சலுடன் வாக்களித்த தமிழர்கள்

திருவனந்தபுரம்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் 72.69 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. தேயிலைத் தோட்ட தமிழக தொழிலாளர்கள், மாவோயிஸ்டுகளின் எச்சரிக்கையை மீறி துணிச்சலுடன் வாக்களித்தனர்.

இரண்டாம் கட்டமாக நடைபெற்ற தேர்தலில் ராகுல் காந்தி போட்டியிட்ட வயநாடு தொகுதியில் 7 2.69 சதவீத வாக்குகள் பதிவானதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவித்தன. கடந்த 2019 தேர்தலில் இந்தத் தொகுதியில் 79.77 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

வயநாடு மக்களவைத் தொகுதியில் இடம் பெற்றுள்ள கல்பெட்டா சட்டமன்ற தொகுதியில் 72.37 சதவீதமும் சுல்தான் பத்தேரியில் 72.40 சதவீதமும் மணந்தவாடியில் 72.51 சதவீதமும் திருவம்பாடியில் 73.06 சதவீதமும் எர்ணாட்டில் 75.51 சதவீதமும், நீலாம்பூரில் 70.74 சதவீதமும் வந்தூரில் 72.83 சதவீதமும் வாக்குகள் பதிவாகி இருந்தன.

தலப்புழா அருகில் உள்ள கம்ப மலை தேயிலைதோட்டத்தில் தமிழர்கள் அதிக அளவில் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த தேர்தலை புறக்கணிக்கும்படி மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

ஆனால், இந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் காலையிலிருந்தே தொழிலாளர்கள் குறிப்பாக பெண்கள் அதிக அளவில் வந்து வாக்களித்தனர். கம்ப மலை, கைத கொல்லி தொடக்கப்பள்ளி வாக்கு சாவடியில் 78.35 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வயநாடு தொகுதியில் மொத்தம் உள்ள 14 லட்சத்து 62 ஆயிரத்து 423 (7 லட்சத்து 41 ஆயிரத்து 354 பேர் பெண்கள்) வாக்காளர்களில் 5 லட்சத்து 49 ஆயிரத்து 482 பெண்கள் உள்பட 10 லட்சத்து 64 ஆயிரத்து 099 பேர் வாக்களித்துள்ளனர்.

கேரள மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் 67. 48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இது கடந்த தேர்தலை விட 77.84 சதவீதம் குறைவாகும்.

அதிகபட்சமாக கண்ணூரில் 70.76% வாக்குகள் பதிவாகியுள்ளன. மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் சசிதரூர் ஆகியோர் போட்டியிட்ட திருவனந்தபுரத்தில் 64.14 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்