Logo
Logo

முக்கிய செய்தி:

பொது

"தேர்தல் முடிவு எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும்" - பிரதமர் மோடி; "மோடி அலை இல்லை; 'விஷம்' தான் உள்ளது" - காங்கிரஸ்

CHENDUR PANDIAN.K27-04-2024
"தேர்தல் முடிவு எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும்" - பிரதமர் மோடி; "மோடி அலை இல்லை; 'விஷம்' தான் உள்ளது" - காங்கிரஸ்

புதுடெல்லி

நடந்து முடிந்த இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தலுக்குப்பின் கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, "தேர்தல் முடிவு எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும்' என்றார். அதே நேரத்தில், "தேர்தலில் மோடி அலை இல்லை. ஆனால் பிரதமர் மோடி விஷத்தை மட்டுமே பரப்புகிறார்" என காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது.

நேற்றைய தேர்தல் வாக்குப்பதிவு முடிந்ததும் பிரதமர் மோடி தனது சமூக வலைதள பக்கத்தில் வாக்காளர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

அவர் மேலும் கூறுகையில், "இரண்டாம் கட்டம் மிகவும் நன்றாக உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைத்த இணையற்ற ஆதரவு எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளிக்கப் போகிறது.

வாக்காளர்கள் தேசிய ஜனநாயக கூட்டணியின் நல்லாட்சியை விரும்புகிறார்கள் இளைஞர்கள் மற்றும் பெண்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தங்கள் ஆதரவை வலுப்படுத்தி இருக்கிறார்கள்" என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு இருக்கிறார்.

காங்கிரஸ் பதிலடி

பீகார் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் பிரதமர் மோடியின் கருத்துகளுக்கு பதிலடி கொடுத்தார்.

அப்போது அவர், "பீகாரில் பரம்பரை வரி பற்றி பிரதமர் மீண்டும் பொய்யாக பேசியிருக்கிறார். அவரிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?. நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் வேலையின்மை, விலைவாசி உயர்வு, பணவீக்கம் மற்றும் பிற பொருளாதாரப் பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசை திருப்பவே மோடி விரும்புகிறார்" என்றார்.

மேலும் "இந்த தேர்தலில் 'மோடி அலை' எங்கும் இல்லை. 'மோடி விஷம்' மட்டுமே உள்ளது. விஷத்தை மட்டுமே அவர் பரப்புகிறார்.

பிரதமர் மிகவும் வெட்கக்கேடான பொய்யான வகுப்புவாத பேச்சுகளில் ஈடுபட்டு வருகிறார். தேர்தல் ஆணையத்திடம் இருந்து அது தொடர்பான எந்த நடவடிக்கையும் இல்லை" என்றும் அவர் கடுமையாக தாக்குதல் தொடுத்தார்.

"வளங்களில் முதல் உரிமை என அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்கின் குறிப்பு, பட்டியலிடப்பட்ட அனைத்து முன்னுரிமை பகுதிகளான எஸ்சி எஸ்டி ஓபிசி பெண்கள் குழந்தைகள் மற்றும் சிறுபான்மையினரின் மேம்பாட்டிற்கான திட்டங்கள் என்ன குறிப்பிடப்பட்டு இருப்பதாகவும்" ஜெயராம் ரமேஷ் விளக்கம் அளித்தார்.

காங்கிரஸ் ஊடகத்துறை தலைவர் பவன் கெரா கூறுகையில், "மோடியின் சமீபத்திய சில அறிக்கைகள், பிரதமர் பதவிக்கு தகுதியற்றவை. இட்டுக் கட்டப்பட்ட கதைகளை அவர் சொல்லுகிறார். பொய் சொல்கிறார். குறைந்த பட்சம் எங்கள் அறிக்கையையாவது முழுமையாக அவர் படித்திருக்க வேண்டும்.

ஒரு பிரதமரின் வேலை சமூகத்தை தங்களுக்குள் சண்டை போட வைப்பது அல்ல. தேர்தல்கள் வந்து கொண்டே இருக்கும்... ஆனால் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி தோற்றால், அரசியல் சாசனம் தோற்றால், மத நல்லிணக்கம் தோற்றுவிடும். அது இருக்காது" என்று கூறினார்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்